கேமரன் டயஸ் (Cameron Michelle Diaz, பிறப்பு: ஆகத்து 30, 1972) ஒரு பிரபல்யமான அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் விளம்பரநடிகை ஆவார். இவர் 1990ம் ஆண்டு தி மாஸ்க் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவர் திரைப்படத் துறைக்கு அறிமுகம் ஆவதற்கு முன் பல விளம்பரத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்பொழுது தி அதர் வுமன், மற்றும் செக்ஸ் டேப் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ஆரம்பகால வாழ்க்கை
கேமரன் டயஸ் சான் டியேகோ, கலிபோர்னியாவில் பிறந்தார். இவரின் தயார் பில்லி ஜோன் மற்றும் தந்தை எமிலியோ லூயிஸ் டயஸ். இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு, அவரின் பெயர் சிமேனே. டயஸ் கலிபோர்னியாவின் லாங் பீச்சில் நகரில் வளர்ந்தார், லாங் பீச்சில் பாலிடெக்னி உயர்நிலை பள்ளியில் கல்வி பயின்றார்.
ஆரம்ப தொழில்
இவர் தனது 16 வயதில் ஒரு விளம்பர நடிகையாக தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார். இவர் தனது 21வது வயதில் தி மாஸ்க் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இந்தத் திரைப்படத்திற்கு ஒரு முக்கிய பெண் நடிகை தேடி கொண்டிருந்த போது, எலைட் என்பவரால் தயாரிப்பாளரிடம் கேமரன் டயஸ் பரிந்துரை செய்யப்பட்டார். இந்தத் திரைப்படம் 1994ம் ஆண்டு முதல் 10 அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றானது. அதை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தார்.
2002இல் டியாஸ்
திரைப்படங்கள்
ஆண்டு
தலைப்பு
பாத்திரம்
குறிப்புகள்
1994
தி மாஸ்க்
டினா கார்லெயல்
1995
த லாஸ்ட் சப்பர்
ஜூட்
1996
சீ இசு தி ஒன்
ஹீத்தர் டேவிஸ்
1996
லிங் மின்னேசொடா
பிரட்டி கிளேட்டன்
1996
ஹெட் அபோவே வாட்டர்
நத்தாலி
1997
டுல்சா டு கீஸ்
ட்ரூடி
1997
மை பெஸ்ட் பிரண்ட்ஸ் வெட்டிங்
கிம்மி வாலஸ்
1997
ஏ லைஃப் லெஸ் ஆர்டினரி
செலினே நவிலலே
1998
பியர் அண்ட் லோதிங்க் இன் லாசு வேகாசு
தொலைக்காட்சி நிருபர்
1998
தேர் இசு சம்திங்க் அபோட் மேரி
மேரி ஜென்சன்
1998
வெரி பேட் திங்க்ஸ்
லாரா கர்ரேட்டி
1999
மேன் உமன் பிலிம்
செலிபிரிட்டி
குணச்சித்திரவேடம்
1999
பீயிங்க் சான் மால்கோவிச்
லோட்டே ஸ்க்வார்ட்ஸ்
1999
எனி கிவேன் சண்டே
கிறிஸ்டினா பக்னியாச்சி
2000
திங்க்சு யூ கேன் டெல் சசுட் பை லுக்கிங்க் அட் ஹெர்