கேம்ப்பெல் வளைகுடா தேசிய பூங்காகேம்ப்பெல் வளைகுடா தேசிய பூங்கா (Campbell Bay National Parkஎன்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும். இந்த தேசிய பூங்கா பெரிய நிக்கோபார் தீவில் அமைந்துள்ளது. இது கிழக்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள நிக்கோபார் தீவுகளில் சுமத்ராவின் வடக்கே 190 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது 1992-ல் இந்தியாவின் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டு இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. மேலும் இது மகா நிக்கோபார் உயிர்க்கோள காப்பகத்தின் ஒரு பகுதியாகும். இந்த தேசியப் பூங்கா தோராயமாக 426 கி.மீ. 2 பரப்பளவைக் கொண்டுள்ளது.. இது சிறிய கலாத்தியா தேசிய பூங்காவிலிருந்து 12-கி. மீ. அகலக் காடு சூழ் தாங்கல் மண்டலத்தால் பிரிக்கப்பட்டுள்ளது.[சான்று தேவை] இங்கு ஈரப்பதமாகவும் வெப்பமாகவும் உள்ள காலநிலை நிலவுகின்றது.[1] வரலாறுகேம்ப்பெல் வளைகுடா தேசிய பூங்கா 1992இல் நிறுவப்பட்டது. தாவரங்கள்கேம்ப்பெல் வளைகுடா தேசிய பூங்காவில் காணப்படும் தாவரங்கள் பெரும்பாலும் வெப்பமண்டல பசுமையான காடுகளை உள்ளடக்கியது. இந்த பூங்காவில் பலவிதமான பிரவுரா அழகுத்தாவரங்கள், மர பெரணி மற்றும் பல வண்ணமயமான அரிதான பூச்செடிகள் காணப்படுகின்றன.[2] விலங்குகள்நண்டு உண்ணும் குரங்கு, தேங்காய் நண்டு, செம்மூக்கு முதலை, பேராமை, நிகோபார் மர மூஞ்சூறு, இராச மலைப்பாம்பு, பழந்திண்ணி வௌவால், பாராடாக்சூரசு, அழுங்காமை, ஒலிவ நிறச் சிற்றாமை, வெள்ளை வயிறு கடற்கழுகு, பெரிய நிக்கோபார் பாம்புண்ணிக் கழுகு முதலிய விலங்குகளும் காணப்படுகின்றன.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia