கே. ஆர். இந்திராதேவிகா. இரா. இந்திரா தேவி (K. R. Indira Devi) (1952 - 2017) இவர் 1952ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்தார். இவர் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் சினிமாவில் மிக சிறந்த இந்திய மேடை மற்றும் திரைப்பட நடிகை ஆவார். அவர் தம் துணை நடிப்பிற்காக நன்கு அறியப்பட்டார். மேலும் ஒரு வெற்றிகரமான டப்பிங் கலைஞராகவும் இருந்தார். ஐந்து சகாப்தங்களாக நெருங்கிய ஒரு வாழ்க்கைத் தொழிலில், அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[1] இந்திரா கொஞ்சும் குமரி (1963) என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். கலைமாமணி விருது தமிழக அரசால்[2] இவருக்கு வழங்கப்பட்டது. 14 வயதில், அவர் சென்னைக்கு வந்தார். நாடகக் குழுவில் சேர்ந்து, மேடை நாடகங்களில் நடிப்பைத் தொடங்கினார். பின்னர் அவர் திரைப்படத் துறையில் துணை நடிகையாகத் தம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினார். 1959ல் நாராயணன் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட கே.வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தின் கீழ் மைனாவதி நடித்த கண் திறந்தது என்னும் படத்தில் இவர் ஏ கருணாநிதிக்கு ஜோடியாக நடித்தார்.நடிகர் ஆர்.எஸ். மனோகர் மற்றும் மனோரமா நடித்த கொஞ்சும் குமரி என்னும் படத்தில் கதாநாயகியாக அவர் அறிமுகமானார், 1963ல் விஸ்வநாதன் மற்றும் மாடர்ன் தியேட்டர்ஸால் இப்படம் தயாரிக்கப்பட்டது. [[3] எம்.ஜி.ஆரின் <b>பெற்றால் தான் பிள்ளையா</b> என்னும் படத்தில் (1966), எம். என் நம்பியாருக்கு ஜோடியாக நடித்தார். சுமைதாங்கியில் (1962) ஜெமினி கணேசனுக்கும், ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் (1965) என்னும் படத்தில் எம்.ஆர்.ராதாவிற்கும் ஜோடியாக நடித்தார். இவர் சிவாஜி கணேசன், சிவகுமார் ஆகிய நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவற்றுள் மிக முக்கியமானவை கந்தன் கருணை மற்றும் சிந்து பைரவி. மன்னன், பணக்காரன் போன்ற படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்தார்.[3][4][5][6] அவரது கடைசிப் படம் கிரிவலம் (2005). இப்படத்தில் ரிச்சர்ட் ரிஷிக்கு பாட்டியாக நடித்தார்.[7] இந்திரா பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார் மற்றும் 500க்கும் மேற்பட்ட படங்களில் டப்பிங் கலைஞராகப் பணி புரிந்தார். பிற படைப்புகள்இந்திரா கொஞ்சும் குமரி படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார். இப்படத்தில் நடித்த பழம்பெரும் நடிகை மனோரமா கதாநாயகியாக நடிக்கும் அந்தஸ்தினைப் பெற்றார். மாவை . ஜி.விஸ்வநாதனின் ஆசிரியர் திரு. இந்தப் படம் மாடர்ன் தியோட்டர்ஸ் 100 திரைப்படமாகும். டி.சுந்தரத்தின் கடைசிப் படமாகும்.[1] சிவாஜி கணேசன் மற்றும் எஸ்.எஸ். ராஜேந்திரன் ஆகியோருடன் இந்திரா தேவி நடித்துள்ளார். மேலும் தேன்கூடு என்ற நாடகத்திலும் அவருடன் இனணந்து நடித்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கைஇந்திராவின் தந்தை கே. எஸ். ராமசாமி ஒரு பிரபல கர்நாடக பாடகராகவும் ஒரு மேடைக் கலைஞராகவும் இருந்தார். [தொடர்பிழந்த இணைப்பு]] இந்திரா பிரபல டப்பிங் கலைஞர் அனுராதாவின் மூத்த சகோதரி மற்றும் டப்பிங் கலைஞரான ஜெயகீதாவின் தாயார் ஆவார். இந்திராவின் கணவர் சங்கர நாராயணன் ஆவார்.[8] இறப்புமார்ச் 16, 2017ல், இந்திரா தேவி சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் வயது 70. மாரடைப்பின் காரணமாக 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் நாள் உயிர் நீத்தார். செயலாளர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன் மற்றும் பொதுச் செயலாளர், உறுப்பினர்கள் உதயா மற்றும் நடிகர் சங்கத் தலைவர்கள் அனைவரும் அன்னாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். விருது
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia