கே. சட்டநாத கரையாளர்
கி. சட்டநாத கரையாளர் (K. Sattanatha Karayalar) இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இளமைசட்டநாத கரையாளர் 1923ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் நாளன்று செங்கோட்டையில் பிறந்தார். செங்கோட்டை எசு. எம். எசு. உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்ற கரையாளர், சென்னை இலயோலாக் கல்லூரி, பல்கலைக்கழக கல்லூரி, திருவனந்தபுரத்தில் கல்லூரி கல்வியினை முடித்துள்ளார். அரசியல்சட்டநாத கரையாளர் திருவாங்கூர்-கொச்சின் சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டுச் செங்கோட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] [2] கரையாளர், 1957ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் 1980ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] [4][5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia