கே. சி. மம்மன் மாப்பிள்ளை

கண்டத்தில் செரியன் மாப்பிள்ளை மம்மன் மாப்பிள்ளை (Kandathil Cheriyan Mappillai Mammen Mappillai) இவர் ஓர் பிரபல பத்திரிகையாளர் ஆவார். இவரது தந்தை வழி மாமாவான கண்டத்தில் வர்கீசு மாப்பிள்ளை என்பவர் இறந்த பிறகு, மலையாள மனோரமா என்ற மலையாள மொழி நாளேட்டின் ஆசிரியரானார்.[1][2] ஒரு பிரபல பத்திரிகையாளர் என்பதைத் தவிர, இவர் ஒரு சுதந்திர போராட்ட வீரருமாவார். இவர் சிறீ மூலம் பிரபல சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். இவர் தோட்டங்களின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தினார். மேலும் இவரது மகன்களின் பல்வேறு நிறுவனங்களின் பின்னணியில் இருந்தார். இவர் காந்தியவாதியான கே. இ. மம்மனின் தந்தைவழி மாமா ஆவார்.

இந்திய சுதந்திர இயக்கத்தின் ஆதரவாலும், ஈடுபாட்டின் காரணமாகவும், இவர் திருவிதாங்கூர் திவானான சர் சே. ப. இராமசுவாமி ஐயருடன் மோதலில் ஈடுபட்டார். அதற்காக கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். அத்துடன் மலையாள மனோரமா செய்தித்தாள் மூடப்பட்டது.[3]

1873 இல் பிறந்த இவர், 1953 திசம்பர் 31இல் 80 வயதில் இறந்தார்.[2] இவர் குஞ்சந்தம்மா என்பவரை மணந்தார். இவர்களுக்கு எட்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். அவர்களில்: கே. எம். செரியன் , கே. எம். மேத்யூ, கே. எம். மம்மன் மாப்பிள்ளை ஆகியோரும் அடங்குவர்.

மனோரமா தகவல் பள்ளியில் சிறந்த மாணவருக்கு வழங்கப்படும் விருதுக்கு இவரது பெயரான கே.சி.மம்மன் மாப்பிள்ளை விருது என்ற பெயரிடப்பட்டது.[4]

மேற்கோள்கள்

  1. "Kerala Directory". Kerala Directory. 13 December 2006. Archived from the original on 8 December 2014. Retrieved 5 December 2014.
  2. 2.0 2.1 "Koti". Koti. 2005. Archived from the original on 13 அக்டோபர் 2014. Retrieved 5 December 2014.
  3. "KC MAMMEN MAPPILLAI AND FAMILY". www.mmfamily.in. Retrieved 2019-07-30.
  4. "മാസ്കോം 17ാം ബിരുദധാന ചടങ്ങ് നടന്നു Convocation". மலையாள மனோரமா. 22 May 2019. Retrieved 20 November 2019 – via YouTube.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya