கே. தாசன்
கே. தாசன் (K. Dasan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 13 ஆவது கேரள சட்டமன்றத்தில் கொயிலாண்டி தொகுதியின் உறுப்பினராக இவர் இருந்தார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சியம்) உறுப்பினராக உள்ளார்.[1] அரசியல் வாழ்க்கைஇந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சியம்) கொயிலாண்டி தொகுதிக் குழு செயலாளராக தாசன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். சேத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியூ), கைத்தறி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) ஆகியவற்றின் தாலுகா அளவிலான செயலாளராகவும் இருந்தார். 1978 ஆம் ஆண்டில் கொயிலாண்டி பஞ்சாயத்து வாரிய உறுப்பினராக இருந்தார். தற்போது சி.பி.ஐ.(எம்) மாவட்டக் குழு உறுப்பினர், கோழிக்கோடு; அகில இந்திய பொதுக்குழு, சி.ஐ.டி.யு. மாநிலக்குழு, சி.ஐ.டி.யு. துணைத் தலைவர், கோழிக்கோடு மாவட்டக் குழு, சி.ஐ.டி.யு. தலைவர், போன்ற பல்வேறு அமைப்புகளின் பொறுப்புகளில் உள்ளார்.[2]
தனிப்பட்ட வாழ்க்கைசிறீ குங்கிராமன் மற்றும் சிறீமதி தம்பதியரின் மகனாக 1952 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி கொயிலாண்டி தாலுகாவில் உள்ள வைய்யூரில் தாசன் பிறந்தார். பத்தாம் வகுப்பு வரை படித்தார். சுலோச்சனா என்பவரை மணந்துகொண்டார். தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia