கே. மாதவன்கே. மாதவன் என்பவர் தமிழக ஓவியராவார். இவர் 1906 -இல் திருவனந்தபுரத்தில் பிறந்தார்.[1] இவரை ஓவிய மன்னர், பேனர் (திரைசீலை) உலகின் தந்தை என்று அழைக்கின்றனர். படிப்புதிருவனந்தபுரம் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். பிறகு சென்னைக்கு வந்து கன்னையா நாடகக் குழுவில் இணைந்தார். அங்கு டி. கே. சண்முகம், என். எஸ். கிருஷ்ணன் போன்றோரின் நாடகங்களுக்கு திரைசீலை வரைந்து கொடுத்தார். ஓவியப் பணிஉமா, முத்தாரம், கலைமகள், கலாவல்லி, நளாயினி காமராஜ், காவேரி, சாவி, கல்கி, ஆனந்த விகடன், தாமரை போன்ற தமிழ் இதழ்களுக்கு ஓவியம் வரைந்துள்ளார். பல ஓவியங்கள் அட்டைப்படங்களாக வந்துள்ளன. அவர் டி.ஏ.எஸ்.ரத்தினம் பட்டணம் பொடிக்காக வரைந்த திருவாசி இல்லாத முருகன் ஓவியம் புகழ்பெற்ற ஒன்று. கன்னையா கம்பெனி, கே.எஸ்.கே. நாடார், தி.க.சண்முகம் சகோதரர்கள் ஜெமினி ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுக்கு ஓவியம் வரைந்துள்ளார். நாடகங்களின் பின்னணி திரைச்சீலைகளையும் வரைந்துள்ளார். சீடர்கள்மாதவன் அவர்களின் ஓவியங்களை கண்டு கற்று கந்தசாமி, தர்மதாஸ், குப்புசாமி, ஆர். நடராஜன், பாலன் ஆர்ட்ஸ் பாலன் ஆகியோர் ஓவியர்களாக மிளிர்ந்தனர். பட்டம்மங்கம்மா சபதம்,நல்ல தம்பி போன்ற படங்களுக்கு கலை இயக்குனராகப் பணியாற்றினார். இவருக்கு ஓவிய மன்னர் என முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை பட்டம் தந்தார். இவற்றையும் காண்கஆதாரங்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia