கைதை (Pandanus odorifer) என்னும் மலர் தாழை இனம். பூவே முள்ளாகிக் கையில் தைப்பதால் ‘கைதை’ என இதற்குப் பெயரிட்டனர். கைதை மேட்டுநிலங்களிலும் மழைநீர் வளத்தில் வளரும். கடற்கரை மணல்வெளியில் வளர்வது கைதை. தாழை என்பது சூடும் பூ. கைதை என்பது நிழல் தரும் மரம்.
தாழை மலரே தாழம்பூ எனப்படுகிறது. நீர்நிலைகளின் கரைகளில் இவை செழித்து வளரும். தாழம்பூவை மகளிர் தலையில் சூடிக்கொள்வர். கூந்தலில் சடை பின்னும்போது சேர்த்துப் பின்னிக்கொண்டும் மணம் கமழச் செய்வர்.
சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் தாழை [2] கைதை [3] ஆகிய இரு மலர்களும் இடம்பெற்றுள்ளன.
கைதை பற்றிச் சங்கப்பாடல் தரும் செய்திகள்
கைதை மலர் வானத்தில் சுடர் வீசும் கதிரவன் போலத் தோற்றமளிக்கும்.[4]
கைதை மலரை மேலே தூக்கி ஒடித்துப் பறிறிப்பார்கள்.[5]
கைதைப் பூவின் இதழ்கள் உண்மையில் அந்த மரத்தின் கிளைகள். அதில் நாரைகள் பெருமீனுக்காக அயிரை மீனைக் கௌவாமல் காத்திருக்கும்.[6]
ஞாழல், புன்னை, கைதை, செருந்தி ஆகிய பூக்களில் ஞிமிறு-வண்டு இமிரும். தும்பி-வண்டு ஊதும்.[7]