கையெழுத்தியல் என்பது கையெழுத்தைப் படித்து ஆராயும், மனித உளவியலுடன் தொடர்புபட்ட ஓர் துறையாகும். முளை, நரப்புத் தொகுதியுடன் தொடர்புபட்ட நோய்களைக் கண்டு அதற்கு பரிகாரம் செய்ய இது மருத்துவ துறையில் பாவிக்கப்படுகிறது. சட்ட ஆவண சோதனையில் இது பிழையாகக் கையாளப்படுவதும் உண்டு. எனவே, கையெழுத்தியல் பற்றிய விவாதம் ஒரு நூற்றாண்டுக்கு மேலாகக் காணப்படுகிறது. இது போலி அறிவியல் என்பது அறிவியலாளர்களின் பெரும்பான்மைக் கருத்து.[1][2][3][4][5][6]
சொல்லிலக்கணம்
கிரேக்கச் சொற்களான grapho- (எழுத்து), logos (உரையாடல்) என்பதிலிருந்து கையெழுத்தியல் (Graphology) என்னும் பதம் ஏனைய துறைச் சொற்களான மெய்யியல், உளவியல், மானிடவியல் போன்று உருவாகிற்று.
அடிப்படைக் கோட்பாடு
கையெழுத்தியல் பின்வரும் அடிப்படைகளை உறுதியாக் கொண்டது.
நாம் எழுதும்போது வெளிமனம் செயற்படும், ஆனாலும் அதன் நிலையின் அளவு மாறுபட்டுக் காணப்படும். இது எழுச்சியுற்றும் தாழ்வுற்றும் காணப்படும். இதுவே எழுதுபவரை எழுதுவதற்குத் தேவையான சுரப்பு மூலம் கட்டுப்படுத்துகிறது.
எழுதும் செயற்பாடு ஒப்பீட்டளவில் கடினமாகும்போது, எழுதுபவர் எழுத்தின் வடிவத்தை எளிமையானதாகவும் அதிகம் பரீட்சயமானதாகவும் மாற்றி விடுவார்.
மத்திய நரம்பு மையம் எழுதும்போது பயன்படும் தசைகளை கட்டுப்படுத்துகிறது. எழுதும் நகர்வுகளின் விளைவான வடிவமானது கை, தோள் கட்டமைப்பு, நெகிழ்ச்சியானதும் முறையானதுமான ஒருங்கிணைப்பினால் மாற்றத்திற்கு உள்ளாகின்றது.
மத்திய நரம்பு மையத்துடன் அதற்கேற்றவாறு எழுதும் அசைவுகள் இருக்க நரம்பியல் பொறிமுறை காணப்படுகிறது. மதுபாவனை மற்றும் சில நோய்கள் மத்திய நரம்பு மையத்தில் குறுகிய, நீண்ட மாற்றத்தை ஏற்படுத்தி கோடுகள் வரைவதில் பிரதிபலிக்கும்.
எழுதும்போது செயற்படும் தசை அழுத்தத்தின் நகர்வு மற்றும் தொடர்பு என்பன அனேகமாக உணர்வுக் கட்டுப்பாடு மற்றும் உளவியல் காட்சியமைப்பு ஆகியவற்றுக்கு வெளியேயுள்ளதாகும். உணர்ச்சி, உள நிலை மற்றும் தசை உறுதி, நெகிழ்ச்சி போன்ற உடலியல் ராசாயன காரணிகள் எழுதுபவரின் எழுத்தில் பிரதிபலிக்கின்றன.
எழுதுதல், வரைதலுக்கான நகர்வுகள் ஆகியன மத்திய நரம்பு கட்டுப்பாட்டினால் நகர்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டதாகும். இது உயிரியல் பொறி மற்றும் விசையியக்கவியல் வரையறையாகும். இவற்றைக் கருத்திற் கொண்டு, கையெழுத்தியலாளர்கள் உளவியல் விளக்கத்திற்காக உருமாதிரி, வடிவம், நகர்வு, சந்தம், தகுதி, வரைபு வீச்சின் உடன்பாடு என்பனவற்றை மதிப்பீடு செய்ய முன்னெடுத்தனர்.
தமிழும் கையெழுத்தியலும்
கையெழுத்தியல் என்றதுமே நினைவுக்கு வருவது மேலத்தேய மொழிகளில் குறிப்பாக ஆங்கிலத்தில் கையெழுத்து பற்றி படித்து ஆராயும் ஒர் துறை என்பதாகும். இத்துறை தமிழ் பேசும் உலகில் பிரபல்யமானது ஒன்றல்ல. ஆனாலும் குறிப்பிடத்தக்களவு ஒருசிலர் இது பற்றி அறிந்துள்ளனர். உதாரணமாக இந்தியன் திரைப்படத்தைக் குறிப்பிடலாம். அதில் கொலையாளியின் வயதைக் கணிக்க அவன் பாவித்த எழுத்துகள் சாட்சியாக இருக்கின்றன.
↑"Barry Beyerstein Q&A". Ask the Scientists. Scientific American Frontiers. Archived from the original on 2008-02-14. Retrieved 2008-02-22. "they simply interpret the way we form these various features on the page in much the same way ancient oracles interpreted the entrails of oxen or smoke in the air. I.e., it's a kind of magical divination or fortune telling where 'like begets like.'"
↑Thomas, John A. (2002). "Graphology Fact Sheet". North Texas Skeptics. Retrieved 2008-02-22. "In summary, then, it seems that graphology as currently practiced is a typical pseudoscience and has no place in character assessment or employment practice. There is no good scientific evidence to justify its use, and the graphologists do not seem about to come up with any."