கொச்சி மெட்ரோ என்பது கேரளாவின்கொச்சி நகரத்தின் பொதுப் போக்குவரத்து தேவைக்காக வரைவு செய்யப்பட்ட விரைவுப் போக்குவரத்துத் திட்டமாகும்.
இத்திட்டத்தின் முதல் கட்டம் 2011ஆம் ஆண்டிலேயே துவக்கப்பட்டாலும், அரசியல் காரணங்களால் கட்டமைப்புத் தடை பெற்றிருந்தது. இருப்பினும் ஆட்சி மாறிய பின்னர் 2012 மார்ச்சு 22 அன்று நடுவண் அரசு இத்திட்டத்தை கூட்டு நிறுவனமாக இயக்க அனுமதி அளித்தது. அதன்படி இதன் முதல் கட்டம் ₹ 5181 கோடி செலவில் கட்டப்பட்டு 2016ஆம் ஆண்டு நிறைவுபெற திட்டமிடப்பட்டுள்ளது.[12]
இந்த வழித்தடத்தை காக்காநாடு வரை நீட்டிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. பாலாரிவட்டம் சந்திப்பு, பாலாரிவட்டம் பைபாஸ், செம்புமூக்கு, வாழக்கலா, குன்னும்புரம், காக்காநாடு சந்திப்பு, கொச்சி சிறப்பு பொருளாதார மண்டலம், சிற்றெட்டுக்கரை, ராஜகிரி, இன்போபார்க் 1, இன்போபார்க் 2 ஆகிய நிறுத்தங்களைக் கொண்டிருக்கும்.[15]