கொரியக் கலை![]() கொரியக் கலை அணிஎழுத்து, இசை, ஓவியங்கள் பாண்டவியல் (pottery), ஆகியவற்றை உள்ளடக்கும். இவை இயற்கை வடிவங்களும் பரப்பு அழகூட்டலும் அடர்வண்ணங்களும் உரத்த ஒலிகளும் கொண்டிருக்கும். அறிமுகம்கொரியக் கலையின் மிகப் பழைய எடுத்துக்காட்டாக கி.மு 3000 சார்ந்த கற்காலப் பணிகளைக் கூறலாம். இவற்றுள் பெரும்பாலும் இறைசார்த்தும் சிற்பங்கள் அமைகின்றன. அண்மையில் பாறைக் கீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடக்கக்கால வகைகளுக்குப் பின்னர் கொரிய அரசு, பெர்ரசு கலைப்பாணிகள் அல்லது முறைமைகள் உருவாகின. கொரியக் கலைஞர்கள் சிலவேளைகளில் சீன மரபுகளை உருமாற்றிய வடிவங்களைப் படைத்தனர். என்றாலும் இவை தம் நாட்டு எளிய நயத்தையும் இயற்கையின் கவினையும் கொண்டு தன்னியல்பாகத் தோன்றியுள்ளன. பலதுறைகளில் கோர்யியோப் பேர்ரசுக் காலத்தில் (918-1392) கலைஞர்கள் சிறந்து விளங்கியுள்ளனர். குறிப்பாக பாண்டவியலில் பெருந்திறமையைக் காட்டியுள்ளனர். சியோலின் மாவட்டமான இன்சாதோங்கில் கொரியக் கலைச் சந்தை செறிவாக அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட காட்சியரங்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு நுண்கலைப் படைப்புகளும் பிறவும் ஏலத்தில் விடப்படுகின்றன. இந்தக் காட்சியரங்குகள் கூட்டுறவு முறையில் நடத்தப்படுகிறன. மிக அழகிய வடிவமைப்புகளில் பல கலைப்பொருள்கள் கிடைக்கின்றன. மேலும் ஒவ்வொரு நகரத்திலும் சிறைய வட்டாரக் காட்சியரங்குகள் உருவாக்கி அங்குள்ள கலைஞர்கள் வட்டாரப் படைப்புகளையும் நிகழ்வடிவப் படைப்புகளையும் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கின்றனர். இவற்றில் பல ஊடகப் படைப்புகளும் கிடைக்கின்றன. மேலைய கருத்துப்படிமக் கலைவடிவங்களையும் உருவாக்கிக் காட்சியில் வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை நியூயார்க்கிலும் சான்பிரான்சிசுக்கோவிலும் இலண்டனிலும் பாரிசிலும் பெருவெற்றி கண்டுள்ளன. வரலாறுஅறிமுகம்கொரியக் கலைப் பண்பாட்டின் தனித்தன்மையைக் கலைத்தொழில் வல்லுநர்கள் ஏற்று வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இவை சீனக் கலையைப் பரப்புவதோடு தனது சொந்த வடிவங்களையும் ஒப்புயர்வாகப் படைக்குந் திறனையும் வெளிப்படுத்தியுள்ளன. "ஒரு நாடு தோற்றுவித்து வளர்த்தெடுக்கும் கலை அந்நாட்டிற்கே சொந்தமானதாகும்." [1] புதிய கற்காலம்![]() மாந்தர் கொரியாவில் குறைந்தது கி.மு 50,000 ஆண்டுகள் அளவில் குடியேறி உள்ளனர்.[2][3] இங்கே கி.மு 7000 ஆண்டு காலப் பாண்டங்கள் கிடைத்துள்ளன. இவை களிமண்ணால் செய்யப்பட்டு, 700 பாகை செல்சியசு வெப்பநிலையில் திறந்த அல்லது மூடிய சூளைகளில் இட்டுச் சுடப்பட்டுள்ளன. [1]. கி.மு 7000 ஆண்டளவில் கிட்த்த பாண்டங்கள் தட்டையான அடியைக் கொண்டுள்ளன. மேற்பரப்பு பொருக்குக் கலைவடிவங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளன. மேலெழுந்தவாரியான கிடைக்கோடுகளும் உருவப் பொதிவுகளும் காணப்படுகின்றன.இவை யுங்கி-முன் பாண்டங்கள் எனப்படுகின்றன. [2] பரணிடப்பட்டது 2012-10-18 at the வந்தவழி இயந்திரம். யேயுல்முன் வகைப் பாண்டங்கள் கூம்பு அடியமைந்து சீப்புப் பாணிப் பொதிவுடன் காணப்படுகின்றன. இவை கி.மு 6000 ஆண்டளவினவாக உள்ளன. இவை சைபீரியப் பாண்டங்களை ஒத்துள்ளன. [3] பரணிடப்பட்டது 2012-10-18 at the வந்தவழி இயந்திரம். முமுன்-வகைப் பாண்டங்கள் தோராயமாக கி.மு 2000 ஆண்டளவில் கிடைக்கின்றன. இவை ஒப்பனையின்றி பெரிய வடிவில் செய்யப்பட்டுள்ளன. இவை சமையலுக்கும் பொருள்களைத் தேக்கவும் பயன்பட்டுள்ளன. செம்புக் காலம்கி.மு 2000 முதல் கி.மு 300 கால இடைவெளியில் கொரியாவில் வெண்கலப் பொருள்கள் இறக்குமதி செய்து வெண்கலப் பாண்டங்கள் செய்யும் பணி நடந்துள்ளது.கி.மு 7 ஆம் நூற்றாண்டளவில் வட்டார வெண்கலத் தொழில்துறை வளர்ந்து விட்டது என்பது கொரிய வெண்கல ஈய விகிதம் மாறுபடுவதில் இருந்து தெரியவருகிறது. [4]. இக்காலத்தில் இங்கு வாள்கள், ஈட்டிகள், குந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சடங்குகளுக்குத் தேவைப்படும் கண்ணாடிகள், மணிகள், தப்பட்டைகள் போன்றவையும் செய்யப்பட்டுள்ளன.[5] பரணிடப்பட்டது 2012-10-18 at the வந்தவழி இயந்திரம். இரும்புக் காலம்கொரியாவில் இரும்புக் காலம் கி.மு 300 இல் தொடங்கியுள்ளது. சீனாவிலும் யப்பானிலும் கொரிய இரும்புக்கு பெருஞ்சந்தை நிலவியுள்ளது.[சான்று தேவை]. கொரியப் பாண்டவியல் உயர்நிலை எய்தியிருந்தது. குயவர்ச் சக்கரமும் பல்லடுக்கு மூடிய சூளையும் அடியடுப்பும் மேலெழும் தீக்கொழுந்து முறையும் வழக்கில் இருந்துள்ளன. மூன்று பேரரசுகள்முப்பேரரசுகளின் காலம் கி.மு 57 இல் இருந்து கி.பி 668 வரை நிலவியது. இந்தக் காலத்தில் கோகுரியியோ, பயேக்யே, சில்லா ஆகிய மூன்று கொரியப் பேரரசுகள் கொரியத் தீவகத்தை ஆண்டன. கோகுரியியோபுத்த மதம் கி.பி 372 இல் கொரியாவில் அறிமுகமாகியது. மஞ்சூரியாவிலும் வட சீன வீ அரசு போன்ற வடக்கு சீன அரசுகளுக்கு அருகில் இருந்த கொரியாவின் வடக்குப் பகுதியிலும் பரவியிருந்த்தால் இது எளிதாகியது எனலாம். புத்த மதம் கோகுரியியோ அரசர்கள் புத்தக் கலையிலும் கட்டிடக் கவினியலிலும் ஆர்வத்தோடு ஈடுபடவைத்தது. கோகுரியியோக் கலையின் குறிப்பிட்த் தகுந்த கூறுபாடு கல்லறை மூரல் ஓவியங்களாகும். இக்கலை நிகழ்கால அரச வாழ்வையும் பண்பாட்டையும் படம்பிடித்தது. கோகுரியியோ ஓவியங்கள் யப்பான் உட்பட்ட கிழக்காசியப் பண்பாட்டில் செலுத்திய தாக்கத்தால் கொகுரியியோ கல்லறை வளாகத்தை யுனசுகோ உலக மரபுச் சின்னமாக அறிவித்துள்ளது.எடுத்துகாட்டாக யப்பானின் ஃஓரியூ-யி மூரல் ஓவியங்கள் கோகுரியியோ தாக்கம் உள்ளவை.மூரல் வண்ன ஓவியங்கள் மற்ற இரு கொரிய அரசுகளிலும் பரவியது. இவ்வரசுகளின் கட்டிடக் கவினியலையும் ஆடைகளையும் புரிந்திட உதவும் புத்தக் கருப்பொருள்களை இம்மூரல் ஓவியங்கள் தீட்டின. இவற்றில் தான் தொடக்கநிலைக் கொரிய இயற்கைக் காட்சிகள் தீட்டப்பட்டன. என்றாலும் கல்லறைச் செல்வங்களை எளிதாக அணுகமுடிந்ததால் அவை வேகமாகச் சூறையாடப்பட்டன. கயாகயா என்பது நகரக் குடியரசுகளின் கூட்டாட்சியாகும். இது நடுவண் கட்டுபாடுள்ள அரசல்ல. இது சில்லா, பயேக்யே அரசுகளின் கலையையும் மர வடிவம் தாங்கிய பொன்முடிகளையும் ஒத்த கலையையும் அரசுமுடிகளையும் பெற்றிருந்தது. கய்யாவின் திமுலியில் கண்டெடுக்கப்பட்ட பொறுட்கள் குதிரையைச் சேர்ந்தனவக உள்ளன. இவை கடிவாளம், சேணங்கள், கவசங்கள் போன்றன. இக்காலத்தில் மற்றெக்காலத்தையும் விட கூடுதலான இரும்புப் பொருட்கள் கிடைக்கின்றன. வடக்கு-தெற்கு அரசுகள்வடக்கு-தெற்கு அரசுகள் காலம் (கி.பி 698-926)என்பது சில்லா அரசும் பயேக்யே அரசும் முறையே வடக்கிலும் தெற்கிலும் ஒருங்கே அரசுபுரிந்த காலமாகும். கட்டிடக் கவினியலும் உள்வடிவமைப்பும்கொரியாவில் நீண்டகால அரண்மனைத் தோட்ட அமைப்பு மரபு உண்டு. உருவப் பாணிகள் மரபுவழி கருத்துவரைகளில் இருந்து பெறப்பட்டனவாக உள்ளன. இவை வடிவியல் பாணிகள், மரம், செடி, கொடி உருவங்கள், விலங்குகளின் உருவங்கள், இயற்கைக் கருப்பொருள்கள் போல ஆகிய நான்கு முதன்மைப் பாணிகளாக அமைகின்றன. வடிவியல் உருவங்களில் முக்கோணங்கள், சதுரங்கள், சாய்சதுரங்கள், சட்டகங்கள், சுருள்கள், வாள்பற்கள், வட்டங்கள், நீள்வட்டங்கள், ஒருமைய வட்டங்கள் ஆகியவை அமைகின்றன. பாறை ஓவியங்களில் வேட்டை, உணவுத் தேடல் காலஞ்சார்ந்த விலங்குருவங்களும் பிற செயல்பாடுகளும் காணப்படுகின்றன. இவ்வகை அழகுருவங்கள் கோயிற் கதவுகளிலும் இறைவிச் சிலைகளிலும் ஆடைகளிலும் வீட்டு இருக்கைகளிலும் அன்றாடப் பொருட்களிலும் குறிப்பாக விசிறி, கரண்டிகளிலும் அமைகின்றன. மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia