கொரியத் தீபகற்பம்
கொரியத் தீபகற்பம் (Korean Peninsula) என்றறியப்படும் முக்கடல் சூழ்ந்த நிலப்பரப்பானது, கிழக்கு ஆசியாக் கண்டத்தில் அமைந்துள்ளது.[2] அது தெற்கே பசுபிக் பெருங்கடலில் சுமார் 1,100 கிலோமீட்டர் (684 மைல்) அளவுக்கு வியாபித்திருக்கிறது. மற்றும் கிழக்கு சப்பான் கடலிலும் சூழ்ந்துள்ளது.[3] மேலும் அது மஞ்சள் கடல் (Yellow Sea) மேற்கு கொரியாவின் நீரிணையில் இருகரைகளிலும் இணைந்துள்ளது.[4] வரலாறுஇரண்டாம் உலக யுத்தத்தின் இறுதிவரை கொரியா அதன் நிலப்பகுதியையும், தோராயமாகக் கொரியத் தீபகற்பத்தில் ஒத்துப்போகும் ஒரு அரசியல் அமைப்பாகும். போர் நிறுத்த உடன்பாட்டின்படி 1953 ஆம் ஆண்டில் கொரியப் போர் முடிவடைந்த பின்னர், குடாநாட்டின் வடபகுதி பிரிவுகளில் கொரிய சனநாயக மக்கள் குடியரசால் ஆளப்படுகின்றது. தெற்குப் பகுதிகளில் கொரியக் குடியரசு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.[5] கொரியத் தீபகற்பத்தின் வடக்கு எல்லைகளைப் பொதுவாக (மற்றும் மறைமுகமாக) இன்றைய நிலைக்கு ஒத்துப்போகிறபடி அரசியல் உள்ளது. வட கொரியா அதன் வடக்கு அண்டை நாடான சீனாவின் எல்லையிடையே 1,416 கி.மீ. (880 மைல்) இணைந்துள்ளது ஜிலின் (Jilin), லியோனிங் (Liaoning), மற்றும் உருசியா ஆகிய மாகாணங்கள் 19 கி.மீ. (12 மைல்) உள்ளது, இந்த எல்லையின் பகுதிகளில், யாலு (Yalu),அம்னோக் (Amnok) மற்றும் துமன் (Tumen/Tuman/Duman) போன்ற ஆறுகள் இயற்கையாகவே உருவாகின்றன. இங்குள்ள வரையறைப்படி எடுத்துக்காட்டாக, (அதன் தீவுகள் உள்பட) கொரியத் தீபகற்பத்தில் 220.847 கி.மீ.2 (85.270 சதுர மைல்) ஒரு பிராந்தியமாக உள்ளது.[6] அணு ஆயுதப் போரில் கொரியத் தீபகற்பம்வடகொரியா, இரண்டு ஏவுகணைகளை தனது நாட்டின் கிழக்கு கரையோர பகுதியை நோக்கி நகர்த்தி மறைத்து வைத்துள்ளதாக தென்கொரியா உள்ளுர் ஊடகமொன்றில் செய்திகள் வெளியிட்டது.[7] இதனால் சப்பான் மற்றும் ஆசிய பசுபிக்கில் அமைக்கப்பட்டள்ள அமெரிக்க ராணுவ தளங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் நிலவுவதாக சுட்டிகாட்டப்பட்டது. தென்கொரியா அமெரிக்கவுடன் இணைந்து மேற்கொள்ளும் கூட்டுப்பயிற்சி நடவடிக்கைகளுக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது, அதன் எச்சரிக்கையை இருநாடுகளும் செவிசாய்க்காத காரணத்தால் வடகொரியா உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கையில் இரங்கியது. வடகொரியா, தென்கொரியாமீது போர் பிரகடனம் மேற்கொண்டதுடன் படைகளையும் தயார்நிலையில் வைத்தது மேலும் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்த தமக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் 05-04-2013 அன்று அறிவித்துள்ளது. இந்நிலையில்தான் வடகொரியா இரண்டு ஏவுகணைகளை தனது நாட்டின் கிழக்கு கரையோரப்பகுதியை நோக்கி நகர்த்தி மறைத்து வைத்துள்ளதாக தெரியவந்தது.[8] இதற்கு பதிலாக அமெரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் தனது ஏவுகணை மற்றும் யுத்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை கொரியத் தீபகற்பத்தை நோக்கி நகர்த்தி வந்தது.[9] இதனால் கொரிய தீபகற்பத்தில் எந்நேரத்திலும் அணு ஆயுதப்போர் தொடங்கும் அபாயம் உள்ளதாக வள்ளுனர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். தென்கொரிய இலக்குகளைவிட, ஐக்கிய அமெரிக்கா ராணுவ தளங்களையே வடகொரியா குறிவைத்துள்ளது என அறியப்பட்டது.[10] வடகொரியா எத்தகைய ஏவுகணையை கிழக்கு கரையோர பகுதியை நோக்கி நிலைநிறுத்தியுள்ளது என்ற சந்தேகம் நிலவியது. எனினும் கண்டம் விட்டு கண்டம் தாவும் சுமார் 3000 கி.மீ.கள் வரையில் செல்லக்கூடிய முசுடன் எனப்படும் ஏவுகணையையே வடகொரியா பயன்படுத்த போவதாக தென்கொரியா தெரித்தது.[11] கொரிய தீபகற்ப இரு நாடுகளின் சுருக்க ஒப்பீடு
மேற்கோள்கள்
உப இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia