கொற்கை அகழாய்வுகள்

பண்டைய தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடு

கொற்கை சங்க காலம் தொட்டே ஒரு துறைமுக பட்டினமாய் இருந்து வந்தது. இதன் பழமையை அறிய தமிழ் நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையால் 1968, 1969களில் இவ்விடத்தில் 12 அகழாய்வு குழிகள் இடப்பட்டன. அதன்படி பொ. மு. 850 ஆம் ஆண்டு மதிக்கத்தக்க பழம்பொருட்கள் கிடைத்தன. அதனால் இவ்வகழாய்வுகள் தமிழ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இங்கு தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த பாணையோடு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் காலம் கரிம நாற்படுத்தல் மூலம் கி.மு. 755 ± 95 எனக் கணிக்கப்பட்டது.[1] அதனால் இதன் ஆய்வுகள் தமிழ் எழுத்து வளர்ச்சியின் ஒரு திருப்புமுனையாய் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

குழிகள்

மூலம் - தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழ்வுகள்[2]

மொத்தம் தோண்டப்பட்ட 12 குழிகளில் சில முக்கியக்குழிகள்,

இரண்டாம் குழி

1.62மீ ஆழத்தில் முதுமக்கள் தாழி ஒன்று கிடைத்தது. தமிழகத்தின் தொன்மையான இதே தாழி அடக்கமுறை ஆதிச்சநல்லூரிலும் காணப்படுகிறது.

மூன்றாவது குழி

செவ்வக வடிவ கட்டிடப்பகுதி.

நான்காம் குழி

செங்கற்சுவர் பகுதி. இதன் செங்கற்கள் 14*29*7.5 செ.மீ. அளவினைக் கொண்டிருந்தன. மேலும் இக்கட்டிடத்தின் கீழ் கிணற்றின் உறைகளும் அதன் தெற்கில் கழிவு நீர் கால்வய்க்கான சுவடுகளும் உள்ளன. மேலும் இக்குழியில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும், சில கரித்துண்டுகளும் கிடைத்துள்ளது.

ஐந்தாவது குழி

நான்கு சாடிகள், சில எலும்புத்துண்டுகள், மட்கலண்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சில்லுகள் ஆகியவை கிடைத்துள்ளன.

மற்ற குழிகள்

சில சங்குகள், சங்கு வளையல்கள், குறியீடுகள் கொண்ட பாணையோடுகளும் உள்ளன.

முக்கியத்துவம்

நான்காவது குழியில் கிடைத்த கரித்துண்டின் காலம் பொ.மு. 785[3] என்று மதிக்கப்படுவதால் (சி 14) அக்காலம் முதலே இங்கு கடல் போக்குவரத்து நடந்தது பற்றி அறிய முடிகிறது.

வகைப்படுத்தல்

இங்கு காணப்படும் நாகரிகத்தை காலத்தைக் கொண்டு இதை 3 வகையாக பகுக்கின்றனர்.

  1. முதல் பண்பாடு - கி.மு. 800 - கி.பி. 400
  2. இரண்டாம் பண்பாடு - கி.பி. 401 - கி.பி. 1000
  3. மூன்றாம் பண்பாடு - கி.பி.1001 - கி.பி.1400

அதன்படி முதற்பண்பாடே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

மேற்கோள்கள்

  1. Excavations of archaeological sites in Tamilnadu 1969 -1995. தமிழக தொல்லியல் துறை. pp. பக்கங்கள் 46 - 56.
  2. தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழ்வுகள், இராசவேலு மற்றும் திருமூர்த்தி, சென்னை, 1995, பக்கம் 91 - 96
  3. "Korkai". தமிழகத் தொல்லியல் துறை. Retrieved ஏப்ரல் 13, 2013.

மூலம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya