கொற்றங் கொற்றனார்கொற்றங் கொற்றனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்களாக இரண்டு உள்ளன. அவை அகநானூறு 54, நற்றிணை 259 ஆகியவை.
அகம் 54
போர் முடிந்து வீடு திரும்பும் தலைவன் தன் தேரோட்டியிடம் சொல்கிறான்.
பண்ணன் கொடைபண்ணன் 'தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்' அவன் ஊர் சிறுகுடி. தலைவியும் குழந்தையும்தலைவி தன் குழந்தையிடம் மழலைமொழி பேசுகிறாள். பண்ணன் சிறுகுடியில் உள்ள நெல்லிப்பழத்தைத் தின்றுவிட்டு தண்ணீர் குடித்தால் இனிப்பது போன்று தன் நா இனிக்கப் பேசுகிறாள். மகன் கழுத்தில் பொன்தாலிபொன்னாலான தாலி அணிந்துள்ள தன் மகனுக்கு முத்தம் கொடுத்து('ஒற்றி') விளையாட விடுகிறாள். ('பொய்க்கும்') பின் கை கை விரல்களால் அழைக்கிறாள். 'வந்தால் பால் தருவேன்' என்கிறாள். இப்படிச் சொல்லும்போது அவளது நா இனிக்கிறதாம். பொய்க்கும் பொய்தல் விளையாட்டுகுழந்தையிடம் பொய் சொல்லி நடக்கவைக்கும் விளையாட்டு தலைவி வீட்டிலேயே அடைந்துகிடக்கும் நிலை வந்துவிட்டது என்பதைத் தலைவனுக்குச் சொல்லித் திருமணம் செய்துகொண்டு அவளை அடையுமாறு குறிப்பாலுணர்த்தும் பாடல் இது. நற்றிணை 259
தோழி தலைவியிடம்
|
Portal di Ensiklopedia Dunia