கொலம்பசு நாள்
புதிய உலகின் பல நாடுகளும் வேறெங்கும் அமெரிக்க நிலப்பகுதியில் கொலம்பசு வந்திறங்கிய அக்டோபர் 12, 1492இன் ஆண்டுவிழாவை அலுவல்முறையில் விடுமுறை நாளாகக் கொண்டாடுகின்றனர். ஐக்கிய அமெரிக்காவில் கொலம்பசு நாள் என்றும் பகாமாசில் கண்டுபிடிப்பு நாள் என்றும், இலத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளில் டியா டெ லா ராசா ("இனவெழுச்சி நாள்") என்றும் பெலீசு, உருகுவையில் டியா டெ லாசு அமெரிகாசு (அமெரிக்காக்களின் நாள்) என்றும் அர்கெந்தீனாவில் டியா டெல் ரெசுபெடோ அ லா டைவர்சிடாட் குல்சரல் (பண்பாட்டு பன்முகமைக்கான மரியாதை நாள்) என்றும் , எசுப்பானியாவில் டியா டெ லா இசுப்பானிடாடு மற்றும் பியெஸ்டா நாசியோனல் என்றும், இத்தாலியிலும் உலகங்குமுள்ள இத்தாலியக் குடியிருப்புக்களிலும் கியோர்னாடா நேசியோனல் டி கிறித்தோபர் கொலம்பசு அல்லது பெஸ்டா நேசியோனல் டி கிறிஸ்டபரோ கொலம்போ என்றும் கொண்டாடுகின்றனர்.[1][2] 18வது நூற்றாண்டிலிருந்தே முறைசாராது கொண்டாடப்பட்டு வந்த இந்த விடுமுறைகள் அலுவல்முறையாக 20வது நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து கொண்டாடப்படுகின்றன. இந்த விடுமுறை நாளுக்கு பலத்த எதிர்ப்பும் இருந்து வந்துள்ளது: ஐக்கிய அமெரிக்காவின் பல பகுதிகள் இந்நாளைக் கொண்டாட மறுக்கின்றன அல்லது இந்நாளை மற்றொரு நிகழ்விற்கான நாளாக கொண்டாடுகின்றன.
மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia