கோகிலப்பிரியா

கோகிலப்பிரியா கருநாடக இசையின் 11 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் (அசம்பூர்ண மேள பத்ததியில்) 11 வது இராகத்திற்கு கோகிலாரவம் என்ற பெயர்.

இலக்கணம்

கோகிலப்பிரியா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி121 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி32 ப ம12 ரி1
  • நேத்ர என்றழைக்கப்படும் 2 வது வட்டத்தில் (சக்கரத்தில்) 5 வது இராகம்.
  • இந்த மேளத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சாதரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்

  • திரிஸ்தாயி இராகம்.
  • கருணைச் சுவையை வெளிப்படுத்துகிறது.
  • எப்போதும் பாடலாம்.
  • இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் சுவர்ணாங்கி (47) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் மத்திம சுரம் முறையே ரிஷபப்பிரியா (62) மேளத்தை தோற்றுவிக்கிறது (மூர்ச்சனாகாரக மேளம்).

உருப்படிகள் [1]

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி கோதண்டராமம் முத்துசாமி தீட்சிதர் ஆதி
கிருதி நேமொரபெட்டி தியாகராஜ சுவாமிகள் திஸ்ர திரிபுடை
கிருதி எவரிதோ தியாகராஜ சுவாமிகள் ஆதி
கிருதி சொன்ன நாவினிக்குது அம்புஜம் கிருஷ்ணா ஆதி
கிருதி மாணிக்க வாசகர் முத்துத் தாண்டவர் ரூபகம்
கிருதி கூவுகின்றேன் சுத்தானந்த பாரதியார் ஆதி
கிருதி சுகவாழ்வடைந்துய்வாய் கோடீஸ்வர ஐயர் ரூபகம்

ஜன்ய இராகங்கள்

கோகிலப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை.

மேற்கோள்கள்

  1. டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya