கோகேலி மாகாணம்
கோகேலி மாகாணம் (Kocaeli Province, துருக்கியம்: Kocaeli ili , pronounced [kodʒaeli] ) என்பது துருக்கியின் ஒரு மாகாணம் ஆகும். சில நேரங்களில் இது கொசேலி என அழைக்கப்படுகிறது. மாகாணத்தின் மிகப்பெரிய நகரங்களாக மிட்சிமிட் மற்றும் கெப்சி ஆகியவை ஆகும். மாகாணத்தின் போக்குவரத்துக் குறியீடு 41 ஆகும். மர்மரா கடலின் கிழக்கு முனையில் இஸ்மிட் வளைகுடாவைச் சுற்றி இந்த மாகாணம் அமைந்துள்ளது. கோகேலி மாகாணத்தின் மேற்கு எல்லைகளாக இசுதான்புல் மாகாணம் மற்றும் மர்மாரா கடலும், வடக்கே கருங்கடல், கிழக்கே சாகர்யா மாகாணம், தெற்கே பர்சா மாகாணம், தென்மேற்கில் யலோவா மாகாணம் ஆகியவை உள்ளன. இஸ்தான்புல் பெருநகரப் பகுதியானது கோகேலி-இஸ்தான்புல் மாகாண எல்லை வரை நீண்டுள்ளது. ஆஸ்மிட் விரிகுடாவின் அளவு மற்றும் இயற்கை அமைப்பு போன்றவை கோல்காக் கடற்படைத் தளம் உட்பட விரிவான துறைமுக வசதிகளுக்கு ஏற்றதாக உள்ளது. இந்த மாகாணம் துருக்கியின் தொழில்துறை தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. கோகேலியில் செங்கிஸ் டோபல் கடற்படை வானூர்தி நிலையம் என்ற வானூர்தி நிலையம் உள்ளது, இது இராணுவ மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. கோகேலியில் இரண்டு பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவை கோகேலி பல்கலைக்கழகம் மற்றும் கெப்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்பவை ஆகும். புள்ளிவிவரங்கள்கோகேலி பெருநகர நகராட்சி [2] மற்றும் மத்திய பரவல் அமைப்பு ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட தரவு. [3] தகவல் (xxxx-12-31) .
மாவட்டங்கள்![]() கோகேலி மாகாணம் 12 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, தலைநகரான இஸ்மித் ( தடித்து காட்டப்பட்டுள்ளது):
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia