கோட்டாறு மறைமாவட்டம்
கோட்டாறு மறைமாவட்டம் (இலத்தீன்: Kottaren(sis)) என்பது கோட்டாறு புனித பிரான்சிஸ் சவேரியார் பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது. இது இந்தியாவின் தென் எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் உட்பட்ட கத்தோலிக்க ஆட்சி பகுதியாகும். இது கோட்டாறு, குளச்சல், ஆலஞ்சி, முட்டம், ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி ஆகிய ஆறு மறைவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.மே 20, 1930ம் ஆண்டு கொல்லம் மறைமாவட்டத்திலிருந்து தமிழ் பகுதிகள் தனியாக பிரிக்கப்பட்டு கோட்டாறு மறைமாவட்டமாக அப்போதைய திருத்தந்தை பதினொன்றாம் பயசு அவர்களால் அறிவிக்கப்பட்டது. இதன் முதல் ஆயராக மேதகு ஆயர் லாரன்சு பெரைரா அவர்கள் பணிபுரிந்தார்கள். இதன் தற்போதைய ஆயர் மேதகு. நசரேன் சூசை ஆவார் +919442365305ம். இது உருவாகும் போது சுமார் 96,000 கத்தோலிக்க கிறித்தவர்கள் இம் மறைமாவட்டத்தில் வசித்து வந்தார்கள். வரலாறுகொல்லம் மறைமாவட்டத்தின் தமிழ் வழங்கும் தென்பகுதி தனியாக பிரிக்கப்பட்டு வராப்புழை மறைமாநிலத்தின் கீழ் இணை மறைமாவட்டமாக கோட்டாறு மறைமாவட்டம் உருவாக்கப்பட்டது.தோவாளை, அகத்தீசுவரம்,(அழகப்பபுரம் தவிர), கல்குளம், விளவங்கோடு,(தூத்தூர் முதலிய 3 கடற்கரை கிராமங்கள் தவிர) ஆகிய நான்கு தாலுக்காக்களையும் உள்ளடக்கிய கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கோட்டாறு மறைமாவட்டத்தின் நிலப்பகுதியாக இருந்தது. இப்பகுதி 1956 நவம்பர் முதல் நாள் தமிழகத்தோடு இணைந்ததை தொடர்ந்து கோட்டறு மாவட்டம் 1963 ம் ஆண்டு அக்டோபர் 11ம் நாளிலிருந்து மதுரை மறைமாநிலத்தின் ஓர் இணை மறைமாவட்டமாக மாறிற்று. குழித்துறை மறைமாவட்டம்2014ஆம் ஆண்டு, திசம்பர் 22ஆம் நாள் கோட்டாறு மறைமாவட்டத்திலிருந்து ஒரு புதிய மறைமாவட்டம் உருவாகியது. குழித்துறை மறைமாவட்டம் என்று அழைக்கப்படுகின்ற இந்த புதிய மறைமாவட்டத்தை திருத்தந்தை பிரான்சிசு உருவாக்கினார். கோட்டாறு மறைமாவட்டத்தின் திரித்துவபுரம் மற்றும் முளகுமூடு என்ற இரு பகுதிகளை உள்ளடக்கிய இந்தப் புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயராகப் பேரருட்திரு ஜெரோம் தாஸ் வறுவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை மாநில சலேசிய சபையைச் சார்ந்தவர். கோட்டாறு மறைமாவட்டத்தின் புதிய ஆயர்: நசரேன் சூசை2017, மே மாதம் 20ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிசு, கோட்டாறு மறைமாவட்டத்தின் கன்னியாகுமரி நகரில் அலங்கார அன்னை ஆலயப் பங்குத்தந்தையாகப் பணிபுரிந்த அருள்திரு நசரேன் சூசை என்பவரை கோட்டாறு மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமித்தார். ஆயர் நசரேன் சூசைக்குத் திருநிலைப்பாடு விழா 2017, சூன் 29ஆம் நாள், தூய திருத்தூதர் பேதுரு, பவுல் பெருவிழாவன்று கோட்டாறு ஆயர் இல்ல வளாகத்தில் நிகழ்ந்தது. ஆயர் நசரேன் சூசை வாழ்க்கைக் குறிப்புகள்
தூய ஞானப்பிரகாசியார் இளங்குருமடம், நாகர்கோவில் மெய்யியல், இறையியல் படிப்பு: தூய இதயக் குருத்துவக் கல்லூரி, பூவிருந்தவல்லி, சென்னை இறையியல் முதுகலைப் பட்டம்: கத்தோலிக்க பல்கலைக் கழகம், லுவேன், பெல்ஜியம் இறையியல் முனைவர் பட்டம்: திருத்தந்தை கிரகோரியார் பல்கலைக் கழகம், உரோமை அரசியல் துறை முதுகலைப் பட்டம்: மதுரை காமராசர் பல்கலைக் கழகம்
1989-1990: உதவிப் பங்குத்தந்தை, குளச்சல் தூய காணிக்கை அன்னை ஆலயம் 1990-1992: தமிழ்நாடு சேவியர் மிஷன் ஹோம் துணை இயக்குநர். மறைமாவட்ட இறையழைத்தல் குழுச் செயலர் 1992-1998: இனையம் புனித எலேனம்மாள் ஆலயப் பங்குத் தந்தை. மறைமாவட்டக் கிறிஸ்தவ வாழ்வுப் பணிக்குழுச் செயலர். குருக்கள் நலக் குழு உறுப்பினர் 1998-2000: பெல்ஜியம் நாட்டில் லுவேன் பல்கலைக் கழகத்தில் இறையியல் மேற்படிப்பு 2000-2003: உரோமையில் திருத்தந்தை கிரகோரியார் பல்கலைக் கழகத்தில் இறையியல் முனைவர் பட்டப் படிப்பு 2003-2011: சென்னை, பூவிருந்தவல்லியில் திரு இதயக் குருத்துவக் கல்லூரியில் இறையியல் பேராசிரியர் பணி. இறையியல் துறைத் தலைவர் 2013 மார்ச் மாதத்திலிருந்து கன்னியாகுமரி நகரில் புனித அலங்கார அன்னை ஆலயப் பங்குத் தந்தை. கன்னியாகுமரி மறைவட்டத் தலைவர் பணி. பல இறையியல் கல்வி நிறுவனங்களில் அழைப்புப் பேராசிரியராகப் பணி (திரு இதயக் கல்லூரி, பூவிருந்தவல்லி, சென்னை; சென்னைப் பல்கலைக் கழகம்; இந்தியத் துறவியர் இறையியல் கல்வியகம், பெங்களூரு; சம்பல்பூர், ஒடிசா; சலேசிய இறையியல் கல்வியகம், சென்னை; தூய பவுல் குருத்துவக் கல்லூரி, திருச்சி; அருள் கடல், சென்னை) மறைமாவட்ட ஆயர்கள்
மறைமாவட்ட முக்கிய நிகழ்வுகள்
மக்கள் தொகை, பணியாளர்கள் புள்ளி விபரங்கள்
மறைமாவட்டத்தில் பணிபுரியும் துறவற சபைகள்
மறைமாவட்டத்தில் பணிபுரியும் துறவியர்
மறைமாவட்ட அமைப்புகளும் நிறுவனங்களும்
கல்வி நிறுவனங்கள்மறைமாவட்ட நிர்வாகத்திற்குட்பட்ட கல்வி நிறுவனங்கள்
துறவியர் நிர்வாகத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள்
கிராம சேவை நிறுவனங்கள்
மறைமாவட்ட அருள் பணிக்குழுக்கள்
பக்தசபைகளும் இயக்கங்களும்
மறைமாவட்ட வெளியீடுகள்
மேற்கோள்கள்வெளி இணைப்புஆயர் நசரேன் சூசை நியமனம் - வத்திக்கான் அறிக்கை மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia