கோட்டு விளக்கப்படம்![]() கோட்டு விளக்கப்படம் அல்லது கோட்டு வரைபடம் (line chart, line graph) என்பது விளக்கப்படங்களுள் ஒரு வகையாகும். இவ்விளக்கப்படம் தகவல்களை, "அடையாளம் காட்டிகள்" எனப்படும் தரவு புள்ளிகளின் தொடரை நேர் கோட்டுத்துண்டுகளால் இணைத்து காட்சிப்படுத்துகிறது.[1] பலதுறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அடிப்படை வகை விளக்கப்படமாக இது உள்ளது. தரவு புள்ளிகள் வரிசைப்படுத்தப்பட்டும் (புள்ளிகளின் x-அச்சு மதிப்புகளைக் கொண்டு), கோட்டுத்துண்டுகளால் இணைக்கப்பட்டும் இருப்பதைத் தவிர கோட்டு விளக்கப்படமானது சிதறல் படத்தை ஒத்திருக்கும். பெரும்பாலும் கோட்டு விளக்கப்படங்கள், கால இடைவெளிகளில் தரவின் போக்கைக் காட்சிப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய கோட்டுப்படங்கள் ஓட்ட விளக்கப்படங்களென அழைக்கப்படுகின்றன.[2] வரலாறுகணிதவியலாளர்கள் பிரான்சிஸ் காக்சுபீ, நிக்கோலசு சாமுவேல் குருக்குயிசு, யோகான் என்றிச் இலாம்பெர்ட் மற்றும் வில்லியம் பிளேபேர் ஆகியோர் பயன்படுத்திய கோட்டு விளக்கப்படங்களே காலத்தால் முந்தியவையாகக் கருதப்படுகின்றன.[3] எடுத்துக்காட்டுஅறிவியல் சோதனைகளில் கண்டறியப்பட்ட விவரங்கள் பெரும்பாலும் வரைபடம் மூலம் காட்சிப்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட காலங்களில் ஒரு பொருளின் வேகத்தைத் தரும் விவரங்கள் பின்வருமாறு வரிசைப் பட்டியலிட்டு அதற்கான கோட்டு விளக்கப்படம் காட்டப்பட்டுள்ளது: ![]()
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia