கோண அதிர்வெண் ω (நொடிக்கான ரேடியன்கள்), அதிர்வெண் ν ஐ (நொடிக்கான சுழற்சிகள், பொதுவாக ஹேட்சில் அளக்கப்படுகிறது) விட 2π எனும் காரணியால் பெரியது. இப்படத்தில் அதிர்வெண்ணைக் குறிக்க f அல்லாது ν பயன்படுத்தப்படுகிறது.
இயற்பியலில் கோண அதிர்வெண் எனப்படுவது சுழலும் விகிதத்தை அளவிடும் எண்ணிக்கணியம். கோண அதிர்வெண்ணானது கோண வேகம் எனப்படும் திசையன் கணியத்தின் பருமன் ஆகும். கோண அதிர்வெண் திசையன் எனப்படுவது சிலவேளைகளில் கோண வேகத்திற்கு ஒத்தசொல்லாக பயன்படுகிறது.[1]
ω என்பது கோண அதிர்வெண் அல்லது கோணக் கதி (செக்கனிற்கான ரேடியன்களில் அளக்கப்படும்),
T என்பது சுழற்சிக்காலம் (நொடிகளில் அளக்கப்படும்),
f என்பது அதிர்வெண் (ஹேட்சில் அளக்கப்படும்),
அலகுகள்
SI அலகுகளில் கோண அதிர்வெண் நொடிக்கான ரேடியன்கள் எனப்படுகிறது, பரிமாணப்படி அலகு ஹேட்சு என்பதும் சரியானதே, ஆனால் நடைமுறையில் சாதாரண அதிர்வெண் f இற்கே பாவிக்கப்படுகிறது, ω இற்கு இல்லையென்றே கூறலாம், இந்த நடைமுறையால் குழப்பம் தவிர்க்கப்படுகிறது.[3]
எடுத்துக்காட்டுகள்
ஓர் கோளம் அச்சுப்பற்றி சுழல்கிறது, அச்சிலிருந்து தொலைவில் அமைந்த புள்ளிகள் விரைவாக நகர்கின்றன இது ω=v/r இனை திருப்திப்படுத்துகிறது.
வட்ட இயக்கம்
வட்ட இயக்கத்திலுள்ள பொருளின் அச்சிலிருந்தான தூரம், தொடலி வேகம், கோண அதிர்வெண் ஆகியவற்றிற்கிடையில் தொடர்புண்டு:
சுருளிவில்லில் இணைக்கப்பட்ட பொருள் ஆடலுறும். சுருளிவில்லை திணிவற்றதாகவும் தடையில்லாததாகவும் கருதினால் அதன் இயக்கம் பின்வரும் கோண அதிர்வெண்ணுடைய எளிய இசையியக்கமாக இருக்கும்:[4]
இங்கு
k வில் மாறிலி
m பொருளின் திணிவு.
ω என்பது இயற்கை அதிர்வெண் (இது சிலவேளைகளில் ω0 ஆல் குறிக்கப்படும்).
அலைவுறும் பொருளின் அதிர்வெண்
இனால் கணிக்கப்படும்,
இங்கு x சமனிலைத் தானத்திலிருந்தான இடப்பெயர்ச்சி.
இங்கு சாதாரண அதிர்வெண்ணைப் பயன்படுத்துகையில் இச்சமன்படானது கீழ்வருமாறு அமையும்
LC மின்சுற்றுக்கள்
LC சுற்றின் பரிவு அதிர்வெண்ணானது மின் கொள்ளளவம் (C ஃபரட்டில் அளக்கப்படுகிறது), மின் தூண்டுதிறன் (L ஹென்றியில் அளக்கப்படுகிறது) ஆகியவற்றின் பெருக்கத்தின் தலைகீழின் வர்க்கமூலத்திற்கு சமனாகும்.[5]