கோதாவரி பாலம்

கோதாவரி பாலம்
கோதாவரி ஆற்றின் குறுக்கேயான கோதாவரி பாலம்
ஆள்கூற்று16°59′52″N 81°45′21″E / 16.99778°N 81.75583°E / 16.99778; 81.75583
வாகன வகை/வழிகள்இரண்டு சாலை மற்றும் ஒரு இரயில் பாதை
கடப்பதுகோதாவரி ஆறு
இடம்இராஜமுந்திரி
Other name(s)இராஜமுந்திரி–கோவ்வூர் பாலம்
Preceded byஹேவ்லாக் பாலம்
Followed byகோதாவரி வளைவு பாலம்
Characteristics
வடிவமைப்புவளைவு பாலம்
மொத்த நீளம்4.1 கி.மீ.
அதிகூடிய தாவகலம்91.5 மீ
தாவகல எண்ணிக்கை27
History
Engineering design byபிரைத்வைட், பர்ன் & ஜெசாப் கட்டுமான நிறுவனம்
திறக்கப்பட்ட நாள்ஆகத்து 16, 1974

கோதாவரி பாலம் அல்லது கோவ்வூர்–இராஜமுந்திரி பாலம் இந்தியாவில், இராஜமுந்திரி என்ற இடத்தில் கோதாவரி ஆற்றில் உள்ள வளைவான பாலமாகும். இது ஆசியாவின் மூன்றாவது நீளமான, ஆற்றின் குறுக்காகக் கட்டப்பட்ட சாலை-இரயில் பாலம் ஆகும். இது இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பாட்னாவில் உள்ள திக்ஹா–சோன்புர் இரயில்–சாலை பாலம் மற்றும் கன்சாய் சர்வதேச விமான நிலையம், ஒசாகாவில் உள்ள வான வாசல் பாலம் போன்றவற்றிற்கு அடுத்தபடியாக வருகிறது. இது கோதாவரி ஆற்றில் இராஜமுந்திரிக்கு அருகில் உள்ள மூன்று பாலங்களில் இரண்டாவது பாலமாகும். இந்த ஹேவ்லாக் பாலம் 1897ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பாலமாகும். தனது முழு பயன்பாட்டையும் தந்து விட்ட காரணத்தால் இந்தப் பாலமானது 1997 ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டது. 1997 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கோதாவரி வளைவுப் பாலமானது ஒரு வில்நாண் உத்திர வகைப் பாலமாகும். 1997 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தப் பாலமானது தற்போது வரை உபயோகத்தில் உள்ளது.

இந்தப் பாலமானது 4.1 கிலோமீட்டர் நீளமுடையது (சாலைப் பகுதி 4.1 கி.மீ - தண்டவாளப் பகுதி 2.8 கி.மீ) 91.5 மீ வீச்சளவுள்ள 27 வளைவுகள் மற்றும் 45.72 மீ வீச்சளவுள்ள 7 வளைவுகள் (இவற்றில் 45.72 மீட்டர் வீச்சளவுள்ள 6 வளைவுகள் 6 பாகை அளவு இராஜமுந்திரி முனையருகே வளைந்துள்ளது) இந்தப் பாலமானது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள கிராப்டன் பாலத்தைப் போன்று இரயில் பாதைக்கு மேலாக சாலைப்பாலம் அமைந்துள்ளது. இந்தப் பாலமானது கோதாவரி வளைவுப் பாலத்தோடு கூடுதலாக இராஜமுந்திரியின் கலை, கலாச்சாரத்தைக் குறிக்கும் சின்னமாக விளங்குகிறது. இந்தப் பாலம் இராஜமுந்திரியின் அங்கீகரிக்கப்பட்ட அடையாளங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.[1]

புவியியல்

சாலை-இரயில் பாலமானது தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஆறான கோதாவரி ஆற்றின் (1000 கி.மீ அல்லது 620 மைல்களுக்கும் அதிகமான நீளம்) குறுக்காகக் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆறானது கடலுக்குள் 60 கி.மீ தொலைவில் கடப்பதற்கு முன்னதாக இந்தப் பாலத்தின் கீழ் பகுதியில் சமவெளிப்பகுதியில் பாய்கிறது. இந்த ஆறு இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஆறாகவும் விளங்குகிறது. இராஜமுந்திரிக்கு அருகிலான இந்தப் பாலத்தின் அமைவிடத்தில் இந்த ஆறானது 2.7 கி.மீ (1.7 மைல்) அளவு அகலமுடையதாக இருக்கிறது. இங்கு இந்த ஆறானது இரண்டு கிளை நதிகளாகப் பாய்வதற்காக பிரிகிறது. அவ்வாறு இந்த நதியானது பிரியும் போது அந்த இரு கிளையாறுகளுக்கு இடையில் ஒரு தீவினை உருவாக்கிச் செல்கிறது. இந்த ஆற்றிலிருந்து வெளியேற்றப்படும் அதிகபட்ச நீரின் கன அளவானது ஏறத்தாழ 3 மில்லியன் கனமீட்டராக இருக்கலாம் எனவும் இந்த ஆற்றின் நீரின் ஓட்டத்தின் அதிகபட்ச வேகம் வினாடிக்கு 5 மீட்டர் எனவும் அறிவிக்கப்படுகிறது.

வரலாறு

கட்டுமானம்

மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது சென்னை - ஹவுரா இடையே இரயில் பாதையை இரட்டைப் பாதையாக்கும் திட்டம் பரிசீலனையில் இருந்தது. கோவ்வூர் மற்றும் இராஜமுந்திரி இடையிலான பாதையைத் தவிர பெரும்பாலான இரயில் பாதையானது இரட்டைப் பாதையாக்கப்பட்டது. இந்த இடத்தில் கோதாவரி ஆற்றின் மேலாக 3 கி.மீ நீளத்திற் பாலம் கட்டப்பட வேண்டியிருந்தது. 1964 ஆம் ஆண்டில் கோவ்வூர் மற்றும் இராஜமுந்திரி இடையிலான இரட்டைப்பாதைக்காக, இராஜமுந்திரியில் கோதாவரி ஆற்றின் மேல் இரண்டாவது பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பகுதி உள்ளூர் மக்களிடையே நீண்ட காலக் கோரிக்கையாக கோவ்வூர் மற்றும் இராஜமுந்திரி இடையே சாலைப்பாலம் ஒன்று வேண்டும் என்பதிருந்து வந்துள்ளது. அவ்வாறு ஒரு பாலமானது கட்டப்பட்டால் அது கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களை இணைக்கும் அத்தியாவசியமான இணைப்பாக அது இருக்கும் என கருதப்பட்டது. ஆந்திரப்பிரதேச மாநில அரசாங்கம், சென்னை - ஹவுரா  இரயில் பாலத்திற்கு மேலாக சாலைப்பாலம் ஒன்று அமைப்பதற்கான முன்மொழிவுடன் முன்வந்தனர்.[2]

மேற்கோள்கள்

  1. https://www.thehindubusinessline.com/2006/03/06/stories/2006030601050500.htm
  2. R.R., Bhandari. Bridges: A Spectacular Feat of Indian Engineering (PDF). Archived from the original (PDF) on 2016-03-05. Retrieved 2018-05-31.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya