கோபால்ட்டு(II) தயோசயனேட்டு
கோபால்ட்டு(II) தயோசயனேட்டு (Cobalt Thiocyanate) கோபால்ட்டின் கனிமச் சேர்மம் ஆகும். இந்தச் சேர்மம், கோகோயினின் இருப்பைக் கண்டறியப் பயன்படும் கோபால்ட்டு தயோசயனேட்டு சோதனையில் பயன்படுவதன் காரணமாக நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். பரவலான தவறான மற்றும் பொய்யான சாட்சியளிப்புகள் மற்றும் தண்டனைகளைத் தவிர்ப்பதில் இந்த சோதனை முக்கியப்பங்கு வகிக்கிறது. டெக்சாசு மாநில ஆரிசு மாவட்ட வழக்கறிஞர் அலுவலகங்கள், நூற்றுக்கணக்கான வழக்குகளில் தவறாக தீர்ப்புகளைக் கண்டறிந்து தவறுதலாகத் தண்டனையளிக்கப்பட்டவர்களை அறிவிக்க முயன்று கொண்டுள்ளன.[1][2] தயாரிப்புஇந்த சேர்மமானது கோபால்ட்டு(II) சல்பேட்டு நீர்க்கரைசல் மற்றும் பேரியம் தயோசயனேட்டு ஆகியவற்றுக்கிடையேயான உப்புக்களின் இடப்பெயர்ச்சி வினையின் காரணமாக தயாரிக்கப்படலாம். தேவையான சேர்மத்தைக் கரைசலில் விட்டுவிட்டு பேரியம் சல்பேட்டானது வீழ்படிவாகிறது:[3]
கோபால்ட்டு தயோசயனேட்டு சோதனைகோபால்ட்டு தயோசயனேட்டு வினைக்காரணியானது 490 மில்லிலிட்டர் வாலைவடிநீர் மற்றும் 500 மில்லிலிட்டர் கிளிசரால் ஆகியவை சேர்ந்த கலவையில் 10 கிராம் கோபால்ட்டு (II) தயோசயனேட்டைக் கரைப்பதன் மூலம் கிடைக்கிறது.[4] கோபால்ட்டு தயோசயனேட்டு சோதனையானது சோதிக்கப்பட வேண்டிய வேதிப்பொருளை 2 முதல் 4 மில்லிகிராம் வரை ஒரு கண்ணாடி சோதனைக்குழாயில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதனுடன் 5 சொட்டுகள் கோபால்ட்டு தயோசயனேட்டு வினைக்காரணியானது சேர்க்கப்படுகிறது. நன்கு குலுக்கிய பிறகு 1 அல்லது 2 சொட்டுகள் அடர் ஐதரோகுளோரிக் அமிலம் சேர்க்கப்படுகிறது.(வேறு அமிலங்களும் சேர்க்கப்படலாம்) [5]) தற்போது சோதனைக்குழாயானது மீண்டும் குலுக்கப்படுகிறது. பிறகு, 10 சொட்டுகள் குளோரோஃபார்ம் அல்லது (குளோரோபார்மை ஒத்த கரைப்பான்கள்) சேர்க்கப்படுகிறது. சோதனைக் குழாயானது சிறிது நேரம் அசைக்கப்படாமல் வைக்கப்படுகிறது. திரவமானது இரண்டு அடுக்குகளாக பிரிய அனுமதிக்கப்படுகிறது. குளோரோபார்ம் (கரிம) அடுக்கின் நிறமானது பதிவு செய்யப்படுகிறது. கோகெயின் ஐதரோகுளோரைடுடன் கோபால்ட்டு தயோசயனேட்டை சேர்ப்பதால், கோகேயின் மேற்பரப்பின் துகள்கள் பிரகாசமான நீல நிறமாக மாற்றமடையும். (கோகேயினை அடிப்படையாகக் கொாண்ட சேர்மங்களுக்கு வெளிர் நீல நிறம் கிடைக்கிறது) ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் ஐதரோகுளோரிக் அமிலம் சேர்க்கப்படும் போது கரைசலானது இளஞ்சிவப்பு (pink) நிறமாகிறது. இதன் பிறகு, 10 சொட்டுகள் குளோரோஃபார்ம் சேர்க்கப்பட்டு கரைசலானது நன்கு சுழலச்செய்யப்பட்டுப் பின் அமைதி நிலையை அடையச்செய்யப்படுகிறது. கோகேயின் மற்றும் கோகேயினை அடிப்படையாகக் கொண்ட சேர்மங்கள் ஆகியவற்றிற்கு நீல நிறமானது கிடைக்கிறது. டைபீன்ஐதரமீன் மற்றும் லிடோகைன் கரிம அடுக்கில் நீல நிறத்தைத் தருகிறது. இந்த சேர்மங்கள் கோகேயினுக்கான சோதனையில் நேர்மறையான முடிவைத் தரும் போலிகள் ஆகும். இதே செயல்முறையில் கரைசலை அமிலத்தன்மையாக்குவதற்குப் பதிலாக, காரத்தன்மையைாக்கினால் இந்தச் சோதனையானது கீட்டமின் ஐதரோகுளோரைடைச் சோதித்தறிவதற்கு உதவும்.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia