கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்பது தமிழக அரசிற்குச் சொந்தமான கோவை மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையிலும் தமிழக அரசினால் 14-7-1909 அன்று ஒரு மருத்துவமனையாகத் தொடங்கப்பட்டு, 1969 -ல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்ட ஒரு மருத்துவமனையாகும். நிருவாகம்கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரின் நேரடி நிருவாகத்தின் கீழ் வரும் இம்மருத்துவமனையை மருத்துவமனையின் தலைவர் (Dean) நிருவகிக்கிறார். இவருக்குக் கீழ் ஒரு கண்காணிப்பாளரும், இருப்பிட மருத்துவ அலுவலரும் (Resident Medical Offier-RMO) பொறுப்பில் இருக்கின்றனர். தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் செயல் தலைமையகமாக இருக்கிறது. அமைவிடம்கோயம்புத்தூர் திருச்சி சாலையில் அமைந்துள்ள இம்மருத்துவமனைக்கு மிக அருகாமையில் தான் 'பாரத் ஸ்டேட் பாங்கு' சாலையில் கோயம்புத்தூர் சந்திப்பு தொடர் வண்டி நிலையம் அமைந்துள்ளது. அரசினர் கலைக் கல்லூரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்டக் காவல் அலுவலகம் (DPO), கோயம்புத்தூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம், மாநகரக் காவல் அலுவலகம்(Coimbatore City Police Office), கோயம்புத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆகியனவும் இம் மருத்துவமனைக்கு அருகில் அமைந்துள்ள முதன்மையான அரசு அலுவலகங்கம் ஆகும். துறைகள்இம்மருத்துவமனையில் உள்ள சில முதன்மையான துறைகள்:
சிறப்புத் தன்மைகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia