கோயம்பேடு மொத்த சந்தை வளாகம்![]() ![]() கோயம்பேடு மொத்த விற்பனை சந்தை வளாகம் (Koyambedu Wholesale Market Complex) சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள அழியக்கூடிய சரக்குகள் விற்பனை வளாகங்களுள் ஒன்றாகும். மேலும், 295 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய ஒரு சந்தை வளாகமாகும். 1996 இல் திறக்கப்பட்ட இந்த வளாகத்தில் 1,000 மொத்த விற்பனை கடைகள் 2,000 சில்லறை கடைகள் உட்பட சுமார் 3,100 கடைகள் உள்ளன. இவற்றுள் 850 பழக் கடைகள் உள்ளது.[1] இது பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து நெசப்பாக்கம் சாலை வரை அமைந்துள்ள ஒரு கட்டிடமாகும். முதலாம் கட்டிடத்தில், உடனே அழியக்கூடிய ஒட்டுமொத்த சந்தை 3,194 கடைகளுடன் 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது காய்கறிகளுக்கான இரண்டு பகுதிகள், பழம் மற்றும் மலர் கடைகள் அடங்கிய கட்டிடமாகும். இரண்டாம் கட்டிடத்தில், துணிச் சந்தை [2] கோயம்பேடு ஜவுளிச் சந்தை[3][4] மற்றும் மூன்றாம் கட்டிடத்தில், ஒரு உணவு தானியச் சந்தை[5] சென்னை மெட்ரோபொலிட்டன் டெவலப்மெண்ட் ஆணையம் (CMDA),இந்தியாவின் மொத்த உணவு தானியங்கள் சந்தை அபிவிருத்தி போன்றவைகள் இவ்வளாகத்தில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேடு தீயணைப்பு நிலையத்தின் அருகே சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகத்திற்குச் சொந்தமான ஏழு முதல் எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் உணவு தானிய சந்தையை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.[6] இரவு10 மணி முதல் காலை 10 மணி வரை செயல்படும் மொத்த சந்தையிலும், காலை 10 மணி முதல் மாலை 10 மணி வரை செயல்படும் சில்லறை சந்தையிலும், 1,00,000 பேர் வருகின்றனர் மற்றும் 500 முதல் 600 வாகனங்கள் ஒவ்வொரு நாளும் வருகிறது.[7] வண்டிகள் நிறுத்துமிடம்2013 ஏப்ரல் 5 ஆம் தேதி, சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகத்தால் திறக்கப்பட்டுள்ள உயிர்மெய் ஆலைக்கு அருகிலுள்ள 7.46 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளியில் அமைந்துள்ளது. இதில் எந்த நேரத்திலும் 400 கனரக வாகனங்களை நிறுத்தி வைக்கலாம்.[8] போக்குவரத்துகோயம்பேடு சந்தை பேருந்து மற்றும் இரயில் போக்குவரத்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.[9] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia