இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். இந்தக் கட்டுரையைத் திருத்தி உதவுங்கள்
கொய்னா எக்ஸ்பிரஸ், வண்டி எண் 11029 மற்றும் 11030[1] கொண்டு செயல்படும் ரயில்சேவையாகும். இது மூன்று நாட்களுக்கு ஒரு முறை இந்திய ரயில்வேயினால் இயக்கப்படுகிறது. மும்பை மற்றும் கோலாப்பூர் நகரங்களுக்கு இடையே இது செயல்படுகிறது. கொய்னா நதி மகாராஷ்டிராவிற்கு குறுக்கே பாய்ந்ததற்கு பிறகு இந்த ரயில்சேவைக்கு கொய்னா விரைவுரயில் என்ற பெயர் வைக்கப்பட்டது.
இதேபோல் 11030 என்ற வண்டி எண்ணுடன் செயல்படும் கொய்னா எக்ஸ்பிரஸ் கோல்ஹபுரில் இருந்து மும்பை நகரத்தினை இரவு 8.15 மணியளவில் சென்றடையும்.
வண்டி எண் 11030
இது கோல்ஹபுரில் இருந்து மும்பை நகரம் வரை செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 41 கிலோ மீட்டர் வேகத்தில், சுமார் 517 கிலோ மீட்டர் தொலைவினை 12 மணி நேரம் மற்றும் 20 நிமிடங்களில் கடக்கிறது. இது இலக்குகளுக்கு இடைப்பட்ட 99 ரயில் நிறுத்தங்களில், 33 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. புறப்படும் நேரத்தில் சராசரியாக ஒரு நிமிடம் தாமதத்தினையும், சென்றடையும் நேரத்தில் சராசரியாக 7 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது.[3]
வண்டி எண் 11029
இது மும்பையில் இருந்து கோல்ஹபுர் வரை செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 44 கிலோ மீட்டர் வேகத்தில், சுமார் 517 கிலோ மீட்டர் தொலைவினை 11 மணி நேரம் மற்றும் 45 நிமிடங்களில் கடக்கிறது. இது இலக்குகளுக்கு இடைப்பட்ட 99 ரயில் நிறுத்தங்களில், 33 நிறுத்தங்களை[4] மட்டுமே கொண்டிருக்கிறது. புறப்படும் நேரத்தில் சராசரியாக மூன்று நிமிடங்கள் தாமதத்தினையும், சென்றடையும் நேரத்தில் சராசரியாக ஒரு நிமிடம் தாமதத்தினையும் கொண்டுள்ளது.