கோவை ஞானி
கோவை ஞானி (சூலை 1, 1935 - சூலை 22, 2020) மார்க்சிய அறிஞரும், எழுத்தாளரும், தமிழிலக்கியத் திறனாய்வாளரும், தமிழாசிரியரும் ஆவார். ‘மார்க்சிய அழகியல்’, ‘கடவுள் இன்னும் ஏன் சாகவில்லை?' உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். ‘நிகழ்’, ‘தமிழ்நேயம்’ உள்ளிட்ட சிற்றிதழ்களையும் நடத்தி வந்தார்.[1] வாழ்க்கைக் குறிப்புகோவை ஞானியின் இயற்பெயர் கி. பழனிச்சாமி ஆகும். இவர் கோயம்புத்தூர் மாவட்டம், சோமனூரில் கிருஷ்ணசாமி, மாரியம்மாள் ஆகியோருக்கு எட்டுப் பிள்ளைகளில் ஒருவராகப் பிறந்தார். கோவையிலும், பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் தமிழிலக்கியம் கற்றார். தமிழாசிரியராக கோவையில் 30 ஆண்டு காலம் பணியாற்றினார். நீரிழிவு நோய் காரணமாக தனது கண்பார்வை இழந்தால் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது துணைவியார் மு. இந்திராணி, உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் 2012 இல் புற்றுநோயால் காலமானார். இவர்களுக்கு பாரிவள்ளல், மாதவன் என இரு மகன்கள் உள்ளனர்.[2] எழுத்துலகில்இவர் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் மார்க்சியக் கோட்பாட்டாய்வுகளையும் செய்து வந்தார். மார்க்சிய ஆய்வாளரான எஸ். என். நாகராஜனின் வழி வந்தவர். பண்பாட்டை வெறுமே பொருளியல் அடிப்படையில் ஆராயும் செவ்வியல் மார்க்சியத்துக்கு எதிரானவர். அண்டோனியோ கிராம்ஷி , அல்தூஸர் போன்ற நவமார்க்சியர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர். இளம் மார்க்ஸ் முன்வைத்த அன்னியமாதல் கோட்பாட்டின் அடிப்படையில் மார்க்சியத்தை விளக்க முயன்றவர். மார்க்சியப் பார்வையில் 25-க்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய நூல்களை இவர் எழுதினார். மார்க்சியம் குறித்தும் சமயம்/மெய்யியல் குறித்தும் பல நூல்களை வெளியிட்டார். 28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள், 5 கட்டுரைத் தொகுதிகள், 3 கவிதை நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளதோடு தொகுப்பாசிரியராகவும் பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். மார்க்சிய இதழாகிய (புதிய தலைமுறையோடும் (1968-70) வானம்பாடி இயக்கத்தோடும் தொடர்பு கொண்டிருந்தார். பின்னர் பரிமாணம் (1979-83), நிகழ் (1988-96), தமிழ்நேயம் (1998-2012) ஆகிய சிற்றிதழ்களை நண்பர்கள் ஒத்துழைப்போடு இவர் வெளியிட்டார்.[2] விருதுகள்
தமிழ்நாடு அரசு சிறந்த நூலாசிரியர் விருதுஇவர் எழுதிய “மார்க்சியம் பெரியாரியம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின், தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் சமயம், ஆன்மீகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. நூல்கள்திறனாய்வு நூல்கள்
மெய்யியல்
கவிதை நூல்கள்
தொகுப்பு நூல்கள்
மறைவுகோவை ஞானி சூலை 22, 2020 அன்று தனது 86-வது அகவையில் கோவை, துடியலூர் வெள்ளக்கிணறு பிரிவு, வி. ஆர். வி நகரில் காலமானார்.[1][2][3] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia