கோஸ்ட்டா ரிக்கா தேசிய காற்பந்து அணி
கோஸ்ட்டா ரிக்கா தேசிய காற்பந்து அணி (Costa Rica national football team), இரசிகர்களால் லா செலெ அல்லது லாசு டைக்கோசு என்றழைக்கப்படும் தேசிய அணி கோஸ்ட்டா ரிக்காவின் சார்பாக பன்னாட்டு காற்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடுகிறது. இதனை கோஸ்ட்டா ரிக்கா காற்பந்துக் கூட்டமைப்பு (Federación Costarricense de Fútbol) மேலாண்மை செய்கிறது. வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பில் மெக்சிக்கோ, ஐக்கிய அமெரிக்காவை அடுத்து மூன்றாவது மிகவும் வெற்றிகரமான அணியாக விளங்குகிறது. நடு அமெரிக்காவில் மிகவும் வெற்றிகரமான அணியாக நான்கு உலகக்கோப்பைகளில் இறுதிப் போட்டிகளில் விளையாடத் தகுதிப் பெற்றுள்ளது. இத்தாலியில் நடந்த 1990 உலகக்கோப்பையில் கடைசி பதினாறுவர் சுற்றினை எட்டியுள்ளது. 2006இல் செருமனியில் நடந்த உலகக்கோப்பையில் மிகவும் மோசமாக விளையாடி 32 அணிகளில் 31வது இடத்தை பிடித்தது. வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பின் தங்கக்கோப்பைப் போட்டிகளில் மூன்றுமுறை (1963, 1969, 1989) வெற்றி பெற்றுள்ளது. நடு அமெரிக்க நாடுகளின் கோப்பையை ஏழு முறை வென்றுள்ளது. நான்கு முறை பங்கேற்ற கோபா அமெரிக்கா போட்டிகளில் 2001இலும் 2004இலும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. மேற்சான்றுகள் |
Portal di Ensiklopedia Dunia