க. தணிகாசலம்க.தணிகாசலம் தாயகம் இதழின் பிரதம ஆசிரியர், எழுத்தாளர், கவிஞர் ![]() அறிமுகம்1974 இல் வெளிவந்து பின் 1983 இலிருந்து யாழ்ப்பாணத்திலிருந்து தொடர்ந்து வெளிவரும் 'தாயகம்' இதழின் பிரதம ஆசிரியர். எழுபதுகளிலிருந்து சிறுகதை எழுத்தாளராக மிளிர்ந்து வரும் இவரது சிறுகதைகள் தாயகம், புது வசந்தம், புதியபூமி இதழ்களில் பல்வேறு புனைபெயர்களில் வெளிவந்திருக்கின்றன. அதேபோல் கவிதைகள் பலவற்றை புனைபெயர்களில் தாயகம் இதழில் எழுதியுள்ளமையோடு பல கவியரங்குகளிலும் பங்கெடுத்துள்ளார். இவரது சிறுகதைகள் பிரம்படி, கதைமுடியுமா என்ற தலைப்புகளில் நூல்களாக வெளிவந்துள்ளன. இவரது தேர்ந்த கவிதைகள் வெளிப்பு என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தேசிய கலை இலக்கியப் பேரவையினை ஆரம்பிப்பதில் முன்னின்றுழைத்து தற்போது அதன் துணைத் தலைவராகவும் செயற்படும் இவர் 'தாயகம்' மூலம் பல எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கின்றார். வாழ்க்கைச் சுருக்கம்யாழ்ப்பாணம் அச்சுவேலியில் 28.09.1946 இல் பிறந்தார். கோப்பாய் இருபாலையை இளமைக்காலத்தில் வசிப்பிடமாக கொண்டவர். கொக்குவிலில் திருமணம் புரிந்து வாழ்ந்துவருகின்றார். யாழ். பரமேஸ்ராக் கல்லூரியில் சிரேஸ்ட தராதரம் வரை பயின்றவர். தனது பதினெட்டாவது வயதிலிருந்து எழுதிவருபவர். இருபாலை பாரதி கலாமன்றம் இவரது நாடக எழுத்தாக்கங்களுக்கு களம் அமைத்துக்கொடுத்தது. பொதுவுடமை வாதியாய்தமிழ் மக்கள் மீதான சிங்களப் பேரினவாத ஒடுக்கலுக்கெதிராகவும் தனது சொந்தக் கிராமமான இருபாலையிலேயே தாழ்த்தப்பட்ட மக்களின் சமத்துவத்துக்கும் சனசமூக நிலையத்தில் சரிநிகர அந்தஸ்த்துக்குமாக சளையாது போராடி வெற்றி கண்டவர். கலை இலக்கியத் தடத்தில்தேசிய கலை இலக்கியப் பேரவையின் தோற்றத்திலிருந்து அதன் இணைச்செயலாளராக நீண்டகாலம் இருந்து அதன் உயிர்நாடியாக் செயற்பட்டவர். போர்க்காலத்திலும் இடம்பெயராமல் புலம்பெயராமல் தாயகம் இதழை நெருக்கடியான காலத்திலும் கொண்டுவந்ததில் அவரது உழைப்பே முதன்மையாக இருக்கின்றது. 90களில் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இலக்கிய அமைப்புக்களை ஒன்றுபடுத்தும் விதத்தில் செங்கையாழியான், செம்பியன் செல்வன், உடுவில்அரவிந்தன் போன்ற பலபடைப்பாளிகளுடன் இணைந்து எழுத்தாளர் ஒன்றியம் அமைப்பு உருவாக்கத்தில் பங்குகொண்டு செயலாற்றியவர். தேசிய கலை இலக்கியப் பேரவையின் இணை அமைப்பாக சமூகவிஞ்ஞான படிப்புவட்டத்தின் உருவாக்கத்தில் முன்னின்று நெருக்கடியான காலகட்டத்திலும் இளந்தலைமுறையினர் மத்தியில் தூரநோக்குச் சிந்தனையை விதைத்து கருத்துரை விவாதம் மூலம் புதிய மாற்றத்தை உருவாக்கும் முனைப்பில் செயற்பட்டவர். இன்றும் செயற்படுபவர். வெளிவந்த நூல்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia