சங்கரமநல்லூர்
சங்கரமநல்லூர் (ஆங்கிலம்:Sankaramanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[3]. இது மடத்தூர், மயிலாபுரம், நல்லண்ணகவுண்டன்புதூர், புது நகரம், ஆத்தூர், குப்பம்பாளையம், ருத்திராபாளையம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது. அமைவிடம்சங்கரமநல்லூர் பேரூராட்சிக்கு, திருப்பூர் 75 கி.மீ. தொலைவில் உள்ளது. உடுமலை 20 கி.மீ. தொலைவிலும், பழனி 20 கி.மீ. தொலைவிலும், தாராபுரம் 25 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இது மடத்துக்குளத்தை வட்டமாக கொண்டு செயல்படுகிறது. பேரூராட்சியின் அமைப்பு32 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி மடத்துக்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,995 வீடுகளும், 10,283 மக்கள்தொகையும் கொண்டது.[4][5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia