சங்கீத நாடக அகாதமி
சங்கீத நாடக அகாதமி (Sangeet Natak Akademi, தேவநாகரி: संगीत नाटक अकादेमी அல்லது தமிழில் ‘இசை, நடனம் மற்றும் நாடக தேசிய மன்றம்’ இந்திய அரசால் நிகழ்த்து கலைகளுக்காக நிறுவப்பட்டுள்ள தேசியளவிலான அகாதமியாகும். 1952ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் கல்வி அமைச்சக்கத்தின் கீழ் புது டெல்லியில் அமைக்கட்ட இந்த மன்றத்தின் முதல் மன்றத்தலைவராக பி. வி. ராஜமன்னார் நியமிக்கப்பட்டார். இதன் திறப்புவிழா சனவரி 28, 1953 அன்று அன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் இராஜேந்திரப் பிரசாத் அவர்களால் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தது. இம்மன்றத்தின் கூட்டாளராகச் சேர்ப்பு மற்றும் விருதுகள் பெருமையும் சிறப்பு மிக்கனவாகவும் கருதப்படுகின்றன. இந்த சங்கீத நாடகக் கழகம் சுய நிர்வாகப் பொறுப்புள்ளது. பொதுக் குழு, செயற் குழு, நிதிக் குழுவால் அவ்வப்போது நியமிக்கப்படும் சிறப்புக் குழுக்கள் இவற்றின் மூலம் இக்கழகத்தின் நிர்வாகம் நடைபெறுகின்றது. குறிக்கோள்இசை, நாட்டியம், நாடகம் ஆகிய கலைகளை ஊக்கி வளர்ப்பதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும். பணிகள்
குறிப்புஇந்தியாவின் பன்னிரண்டு மாநிலங்களில் இதுபோன்ற தனி நிர்வாகப் பொறுப்புள்ள சங்கீத நாடக சங்கங்கள் உள்ளன. தமிழகத்திலும் சென்னை மாநில சங்கீத நாடக சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் இயங்கி வருகின்றது[2]. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia