சச்சின் இராச்சியம்
![]() ![]()
வரலாறுசச்சின் இராச்சியம் 6 சூன் 1791 அன்று நவாப் முதலாம் அப்துல் கரீம் முகமது யாகூத் கான் என்பவரால் நிறுவப்பட்டது.[1] இந்த இராச்சியத்தின் குடிமக்கள் பெரும்பான்மையினர் இந்துக்கள் ஆவார். எனும் பஷ்தூன் Abdul Karim Mohammad Yakut Khan I களால் நிறுவப்பட்டது. துவக்கத்தில் சச்சின் இராச்சியம் மராத்தியப் பேரரசின்] பேஷ்வாக்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் 1807-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற சச்சின் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி, சூரத் முகமையின் கீழ் சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தின் சூரத் முகமையின் கீழ் இருந்தது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி சச்சின் இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1956-இல் மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, சச்சின் இராச்சியம் குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.[2][3][4]தற்போது சச்சின் இராச்சியம் சூரத் மாவட்டத்தின் பகுதியாக உள்ளது. சச்சின் இராச்சிய ஆட்சியாளர்கள்சச்சின் இராச்சிய ஆட்சியாளர்கள், பிரித்தானிய இந்தியாவின் 9 பீரங்கி குண்டுகள் மரியாதையுடைய சச்சின் இராச்சிய ஆட்சியாளர்கள் நவாப் பட்டத்துடன் ஆட்சி செய்தனர்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia