சச்சின் (திரைப்படம்)
சச்சின் (Sachein) 2005-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆவார். இது 2002-இல் வெளியான நீத்தோ தெலுங்குத் திரைப்படத்தின் மறுஆக்கம் ஆகும்.[2][3] நடிகர்கள்
வெளியீடுதமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 2005 ஏப்ரல் 14 அன்று வெளியான இத்திரைப்படம், இரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி, கமல்ஹாசன் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற திரைப்படங்களுடன் வெளிவந்தது. பின்னர் யூடியூப்பிற்காக இந்தியில் கமண்டி என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது.[4] சந்தைப்படுத்துதல்படத்தின் விளம்பரத்தில் ஈடுபட்ட ஐ. டி. சி லிமிடெட், படத்திலிருந்து விஜயின் சில படங்களைக் கொண்ட ஒரு சிறப்பு விளம்பரத்தை அறிமுகப்படுத்தியது.[5] மறுவெளியீடு2025 பிப்ரவரி 11 அன்று, கலைப்புலி எஸ். தாணு படம் வெளியான 20 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் கோடையில் மீண்டும் வெளியிடப்படுவதாக அறிவித்தார்.[6] இப்படம் 20 ஆண்டுகள் கழித்து, அதன் அசல் வெளியீட்டிற்குப் பிறகு 2025 ஏப்ரல் 18 அன்று உலகளவில் மீண்டும் வெளியிடப்பட்டது.[7] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia