சஞ்சிப் குமார் மல்லிக்
சஞ்சிப் குமார் மல்லிக் (Sanjib Kumar Mallick) (ⓘ ; பிறப்பு 11 ஏப்ரல் 1975) ஒடிசாவைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஒடிசா அரசியலில் பிஜு ஜனதா தளத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். 2019 ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்தின் உறுப்பினராக பத்ரக் தொகுதியில் இருந்து ஒடிசா சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] இவர் பாரதிய ஜனதா கட்சியின் பிரதீப் நாயக்கை 33,389 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். [2] தொடக்க கால வாழ்க்கை மற்றும் குடும்பம்சஞ்சிப் மல்லிக் 11 ஏப்ரல் 1975 அன்று பத்ரக்கில் முன்னாள் இந்திய அரசியல்வாதியான இருதானந்த மல்லிக் மற்றும் அன்னபூர்ணா மல்லிக் ஆகியோருக்குப் பிறந்தார். [3] இவரது சகோதரர் மனாஸ் ரஞ்சன் மல்லிக் ஒடிசா சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். [4] அரசியல் வாழ்க்கைசஞ்சிப் தனது தந்தை மற்றும் சகோதரரின் மரணத்திற்குப் பிறகு தீவிர அரசியலில் நுழைந்தார். இவர் பிஜு ஜனதா தளத்தில் சேர்ந்து 2019 ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பத்ரக்கிலிருந்து 16 வது ஒடிசா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia