சட்டி பனியன் கும்பல்சட்டி பனியன் கும்பல் (Chaddi Banian Gang) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் உட்பட பலபகுதிகளில் காணப்பட்ட ஏதோசில நபர்கள் ஒன்றுசேர்ந்து உருவான குற்றவியல் கும்பலைக் குறிக்கிறது.[1] கச்சா பனியன் கும்பல் என்ற பெயராலும் இக்கும்பல் அழைக்கப்படுகிறது. இக்கும்பல் உள்ளாடைகள் மட்டுமே அணிந்து கொண்டு தாக்குதல் நிகழ்த்தக் கூடிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த கும்பலாகும். சட்டி , பனியன் என்று உள்ளூர் மொழியிலும், உள்காற்சட்டை (underwear) மற்றும் பனியன் (baniyan) என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் இவற்றை உள்ளாடைகள் என்ற பொதுப் பெயரால் அழைக்கின்றனர[2] தாக்குதல்5 முதல் 6 அல்லது 8 முதல் 10[3][4] பேராக இவர்கள் இயங்கினர். பகல் வேளையில் குர்தா, லுங்கி அணிந்து இரயில் நிலையம், பேருந்து நிலையம் அல்லது ஒரு குடியிருப்புப் பகுதியின் காலிமனை போன்ற பகுதிகளில் தங்கியிருப்பர். கூலியாட்கள், பிச்சைக்காரர்கள் போல சுற்றியலைந்து கொள்ளையடிக்க வேண்டிய வீடுகளை அடையாளம் காண்பார்கள். ஒரே நேரத்தில் பலவீடுகளை கொள்ளயடித்து முடிந்த பின்னர் வேறு ஊருக்குச் சென்று விடுவர். தடிகள், கோடாலிகள், கத்திகள் மற்றும் நாட்டு வெடிபொருட்கள் போன்ற ஆயுதங்களுடன் செல்லும் இவர்கள் சூறையாடும் வீட்டு உறுப்பினர்களைக் கட்டிப் போட்டு கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தினர். சில சந்தர்ப்பங்களில் வாடகை வாகனங்களை எடுத்துக் கொண்டும் கொள்ளைக்கு இவர்கள் சென்றுள்ளனர். சில கோவில்களையும் இக்கும்பல் கொள்ளையடித்ததாக சந்தேகிக்கப்படுகிறது. அடையாளம்பல வழக்குகளில் இத்தகைய கும்பலில் பேசு பார்தி இனத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் சிலர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்[5][6]. சில வழக்குகளில் இவர்களுடன் சேர்ந்து வேறு பலரும் குற்றவாளிகளாக இருந்துள்ளனர்.[7][8] சம்பவங்கள்1999[9][10] ஆம் ஆண்டு முதல் இவர்களின் அட்டூழியம் தொடர்பான செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராசத்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசம் முதலிய மாநிலங்களிலும் இவர்களுடைய கைவரிசைகள் நிகழ்ந்துள்ளன.[11] கைதுகள்அபூர்வமாக இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் பிடிபடுவதுண்டு.[12] அவர்கள் யாவரும் நாடோடிகள் என்று நம்பப்படுகிறது. போரிவாலியில் காவல் துறையினர் ஊடுருவி ஒருமுறை சட்டி பனியன் கும்பலை கைது செய்துள்ளனர்.[13] இவற்றையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia