சதுரங்கப்பலகை
சதுரங்கப் பலகையின் தோற்றம்
சதுரங்கப்பலகை (Chessboard) என்பது நீளப்பாங்காகவும், கிடைப்பாங்காகவும் சதுரங்களைக் கொண்டிருக்கும், சதுரங்கம் விளையாடப் பயன்படும் பலகை ஆகும். இப்பலகை அறுபத்து நான்கு சதுரங்களைக் கொண்டதாகும் (கிடையாக எட்டு, நிலைக்குத்தாக எட்டு). இச்சதுரங்கள் இரண்டு வெவ்வேறு நிறங்களில் (மென்மையான மற்றும் கடுமையான) காணப்படும். பொதுவாக கருப்பு மற்றும் வெள்ளை எனும் நிறங்களின் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. விளையாடும்போது இந்தப் பலகை விளையாடுபவர்களின் வலது கை மூலையில் வெள்ளைச் சதுரம் வரும் வகையில் வைக்கப்படுவது சதுரங்க விதிமுறைகளில் ஒன்றாகும். சதுரங்க பலகையின் அளவு அதில் பயன்படுத்தும் காய்களின் அளவிற்கேற்ப மாறுபடும். ![]() வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடுபவரின் பக்கத்திலிருந்து பார்க்கும் போது பலகையின் செங்குத்து வரிசைகள் a இலிருந்து h வரை பெயரிடப்பட்டிருக்கும். அதேபோல் கிடை வரிசைகள் 1 இலிருந்து 8 வரை பெயரிடப்பட்டிருக்கும். வெளியிணைப்புகள்
மேற்கோள்கள்
படக்காட்சியகம் |
Portal di Ensiklopedia Dunia