சத்யசோதாக் சமாஜம்![]() சத்யசோதாக் சமாஜம் (Satyashodhak Samaj) என்பது 1873 செப்டம்பர் 24 இல் புனேயில் உள்ள ஜோதிராவ் புலேவினால் நிறுவப்பட்ட ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் ஆகும். இந்திய சமூக சூழலில் சூத்திரர்கள் மற்றும் தீண்டாமைக்கு உட்பட்ட சாதிகளை சுரண்டல் மற்றும் அடக்குமுறைகளிலிருந்து விடுவிப்பதே இதன் நோக்கம் ஆகும். [1][2] “உண்மை நாடுவோர் சங்கம்” என்பது இதன் பொருள். புலே தனது எழுத்துகள் மற்றும் இயக்கங்கள் மூலம் சாதிப் படிநிலையையும் பிராமண மேலாதிக்கத்தையும் கண்டித்தார். இந்து மதம் சார்ந்த நூல்கள், ஏற்றத்தாழ்வைவும், மக்களிடையே சுரண்டல் போக்கையும், குருட்டு மற்றும் தவறான வழிபாட்டு சடங்குகள் மற்றும் பரவலாக இருக்கும் போலித்தனத்தையும் அவர் கண்டனம் செய்தார். 1889-இல் பம்பாயில் ஐந்தாவது காங்கிரஸ் மகா சபை நடந்த இடத்திலேயே புலே உழவர் பேரணியை நடத்தினார். பேரணியில் உழவர் எழுச்சிப் பாடல் இசைக்கப் பெற்றது. ஜோதிராவ் கோவிந்த புலேவிற்கு பிறகு 20-ஆம் நூற்றாண்டில் மராத்திய ஆட்சியாளரும் கோலாப்பூர் மன்னருமான சத்திரபதி சாகு மகராஜ், மற்றும் மராத்தியத் தலைவர்களான நானா பாட்டீல், கந்தரோவோ பாகல் மற்றும் மாதவ்ராவ் பாகல் ஆகியோரால் இந்த இயக்கமானது உயிருடன் இருந்தது.[3]
குறிப்புகள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia