சந்திரமதி முதலியார்மன்னர் சந்திரமதி முதலியார்(Chandramathi Mudaliar) என்பவர் 17 ஆம் நூற்றாண்டில் தென் கொங்குநாட்டின் (தற்போதைய ஈரோடு பகுதி) சிற்றரசர் ஆவார். தெலுங்கு மன்னர் திருமலை நாயக்கருக்கு கப்பம் கட்ட மறுத்து அவரை எதிர்த்து போரிட்ட முதல் தமிழ் மன்னர் கொங்கு நாட்டின் வேந்தர் ஈரோடு மன்னர் சந்திரமதி செங்குந்த முதலியார் ஆவார்.[1] இவர் தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக தெலுங்கு மதுரை நாயக்கர் அரசுக்கு எதிராக பல போர்களை நடத்தியவர். ஈரோடு கோட்டையை மன்னர் சந்திரமதி முதலியார் மற்றும் அவரது குடும்பத்தினரால் கட்டப்பட்டது. பின்னர் ஈரோடு கோட்டை ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்டது. சந்திரமதி முதலியார் செங்குந்தர் தெரிந்த கைக்கோளர் படையின் வம்சாவளில் வந்தவர் என அறியப்படுகிறது.[2][3][4][5][6][7] சந்திரமதி முதலியார் மடம்இவரது பெயரில் சந்திரமதி முதலியார் சரித்திரம் என்பது 1628 இல் ஈரோட்டில் அமைக்கப்பட்டது. அக்காலத்தில் இந்த மடம் சமயப்பணிகளை செய்துள்ளது.[8] ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia