சந்திரவதனா செல்வகுமாரன்

சந்திரவதனா செல்வகுமாரன்
பிறப்புசந்திரவதனா தியாகராஜா
மேலைப்புலோலியூர், ஆத்தியடி, பருத்தித்துறை
இருப்பிடம்ஜெர்மனி
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்விவடமராட்சி இந்து மகளிர் கல்லூரி
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்
சமயம்இந்து
பெற்றோர்(கள்)மு. ச. தியாகராஜா, சிவகாமசுந்தரி
பிள்ளைகள்திலீபன், தீபா, துமிலன்
வலைத்தளம்
.wikipedia. Manaosai

சந்திரவதனா செல்வகுமாரன் (மேலைப்புலோலியூர், ஆத்தியடி, பருத்தித்துறை, இலங்கை) ஜேர்மனிய, ஈழத்து எழுத்தாளர். இவர் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை பல்வேறு தளங்களிலும் எழுதி வருவதுடன், பல தமிழ் இணைய இதழ்களின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்

சந்திரவதனா இலங்கையின் வடபுலத்தில் அமைந்துள்ள ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மு. ச. தியாகராஜா, சிவகாமசுந்தரி இணையரின் குழந்தைகள் எண்மரில் இரண்டாமவர். வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்றவர். கணிதத் துறையில் மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர். 1986இலிருந்து புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வாழ்ந்து வருகிறார்.

எழுத்துலக வாழ்வு

1975இலிருந்து எழுதிவரும் இவரது எழுத்தார்வம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மூலமாகத் தொடங்கியது. இவரது பன்முகப்பட்ட படைப்புகள் வானொலிகள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்கள் பலவற்றில் வெளிவந்துள்ளன. இவர் தனது மனஓசை வலைப்பதிவு வாயிலாக சமூக, அரசியல், இலக்கிய மற்றும் சுய உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். சிறுகதை, கவிதை, கட்டுரையென இவரது பன்முக ஆற்றல் வெளிப்படுகிறது.

இவரின் படைப்புக்கள் எரிமலை, களத்தில், ஈழமுரசு, ஈழநாடு, குமுதம், இளங்காற்று, புலம், சக்தி (பெண்கள் இதழ்), பெண்கள் சந்திப்பு மலர் (பெண்கள் இதழ்), உயிர்ப்பு, பூவரசு (சஞ்சிகை), வெற்றிமணி, முழக்கம், தங்கதீபம், வடலி, குருத்து, செம்பருத்தி, யாழ் (இணைய இதழ்), சூரியன் (இணைய இதழ்), பதிவுகள் (இணைய இதழ்)[1], திண்ணை (இணைய இதழ்)[2][3], அக்கினி (இணைய இதழ்), யுகமாயினி உட்படப் பல பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் இணைய இதழ்கள் போன்றவற்றில் வெளிவந்திருக்கின்றன.

இவரது ‘வழக்கம் போல் அடுப்படிக்குள்’ என்ற கவிதை, சமூகக் கட்டமைப்பைத் தோலுரிக்கும் பெண்மொழிக்கவிதைகள் என்ற தலைப்பில், தமிழ்த்துறை அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.[4]

இணைய இதழ்கள்

2002 இல் இவர் ஆரம்பித்த மனஓசை இணையஇதழும், 2003 இல் ஆரம்பித்த மனஓசை வலைப்பூவும்(வலைப்பதிவு), பெண்கள் வலைப்பதிவும் தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

வெளிவந்த நூல்கள்

  • மனஓசை - சிறுகதைத் தொகுப்பு (ஆவணி, 2007)
  • அலையும் மனமும் வதியும் புலமும் - ((2019)
  • நாளைய பெண்கள் சுயமாக வாழ... - (2019)
  • யார் மனதில் யார் இருப்பார்..! - சிறுகதைகள் (நவம்பர், 2024)
  • என்னப்பா... இன்னும் வெளிக்கிட்டு முடியேல்லையோ..? - சிறுகதைகள் (நவம்பர், 2024)
  • பாவை என்று சொல்லாதே என்னை! - கவிதைகள் (டிசம்பர், 2024)

பதிப்பித்த நூல்கள்

  • தீட்சண்யம் - (கவிதைத்தொகுப்பு, 2009)
  • தொப்புள் கொடி - (நாவல், 2009)
  • மூனாவின் நெஞ்சில் நின்றவை - (பத்தி, 2019)
  • மூனாவின் கிறுக்கல்கள் - (Cartoon, 2019)[5]
  • மறந்து போக மறுக்கும் மனசு - (பத்தி, 2019)
  • பெருநினைவின் சிறு துளிகள் (2020)[6]
  • நெடுஞ்சுடர்: மானுடத்தின் நேசகியாய் வாழ்ந்து நிறைந்த ஒரு தாயின் வாழ்வும் வரலாறும் - (வாழ்க்கை வரலாறு, 2023)
  • புதனும் புதிரும் - (சிறுகதைகள், 2024)
  • கருத்துப்படம் - (ஓவியம், 2024)[7]

பரிசுகளும் விருதுகளும்

  • அரிமா சக்தி விருது - மனஓசை சிறுகதை நூலுக்காக, `திருப்பூர் மத்திய அரிமா சங்கம்´ வழங்கியது (17.05.2009)[8] [9]
  • மூன்றாவது பரிசு - பூவரசு 12வது ஆண்டு நிறைவு சிறுகதைப் போட்டியில் `பூவரசு கலை இலக்கியப் பேரவை வழங்கியது´ (08.02.2003)[10]
  • முதலாவது பரிசு - பூவரசு 11வது ஆண்டு நிறைவு சிறுகதைப் போட்டியில் `பூவரசு கலை இலக்கியப் பேரவை´ வழங்கியது (2002) [11]
  • இரண்டாவது பரிசு - பூவரசு 10வது ஆண்டு நிறைவு சிறுகதைப் போட்டியில் `பூவரசு கலை இலக்கியப் பேரவை வழங்கியது´ (2001)

மேற்கோள்கள்

  1. இணையத்தமிழ் இதழ்களில் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள் – முனைவர்.வே.மணிகண்டன்
  2. http://old.thinnai.com/?author_name=Cantiravatana
  3. http://old.thinnai.com/?author_name=Cantiravatanacelvakumaran
  4. சர்வதேசத்தமிழ் ஆய்விதழ்
  5. மூனாவின் கிறுக்கல்கள் நூல் - என். செல்வராஜா
  6. 'பெருநினைவின் சிறு துளிகள்' நூல் பற்றிய நூல்விமர்சனம்
  7. https://noolaham.media/islandora/object/noolaham%3A67271 கருத்துப்படம் – மூனா
  8. திருப்பூர் மத்திய அரிமா சங்கம் வழங்கிய அரிமா சக்தி விருது
  9. `திருப்பூர் மத்திய அரிமா சங்கம்´ வழங்கிய அரிமா சக்தி விருது சான்றிதழ்
  10. பூவரசு கலை இலக்கியப் பேரவையால் சந்திரவதனாவுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்
  11. பூவரசு கலை இலக்கியப் பேரவையால் சந்திரவதனாவுக்கு வழங்கப்பட்ட பரிசு

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya