சன்ஸ்கர் கேந்திரா, அகமதாபாத்
சன்ஸ்கர் கேந்திரா எனப்படுகின்ற சன்ஸ்கர் அருங்காட்சியகம் இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகமாகும். இது கட்டிடக் கலைஞர் லே கார்பூசியர் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இது ஒரு நகர அருங்காட்சியகம் என்ற பெருமையுடையது. இந்த அருங்காட்சியகத்தில் அகமதாபாத்தின் வரலாறு, கலை, கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலை தொடர்பான கலைப்பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படாங் கைட் அருங்காட்சியகம் எனப்படுகின்ற அருங்காட்சியகத்தில் காத்தாடிகள் (பறக்க விடுகின்ற பட்டங்கள்), புகைப்படங்கள் மற்றும் பிற கலைப்பொருட்கள் உள்ளன.[1] பால்டிக்கு அருகிலுள்ள சர்தார் பாலத்தின் மேற்கு எல்லையின் முடிவில் இந்த வளாகம் அமைந்துள்ளது.[2] வரலாறுஇந்த அருங்காட்சியகத்தை லே கார்பூசியர் என்ற சுவிஸ்-பிரெஞ்சு கட்டிடக் கலைஞர் நவீனத்துவ பாணியில் வடிவமைத்தார். வடிவமைப்பின் போது இந்த அருங்காட்சியகம் அறிவு அருங்காட்சியகம் என்று பெயரிடப்பட்டது. இது முதலில் அகமதாபாத்தின் கலாச்சார மையத்தின் ஒரு பெரிய வளாகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அங்கு மானுடவியல், இயற்கை வரலாறு, தொல்லியல், நினைவுச்சின்ன சிற்பங்கள் ஆகியவை உள்ளன. திறந்தவெளி அருங்காட்சியகத்தில் பட்டறைகள் மற்றும் டிப்போக்கள் நாட்டுப்புறக் கதைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பல்வேறு பாடங்களுக்கு தனித்தனி அரங்கங்களைக் கொண்டு அது அமைந்துள்ளது. அதிசயப் பெட்டி என்று அழைக்கப்படும் அரங்கமும் இங்கு உள்ளது. கலாச்சார மையத்திற்காக ஆரம்பத்தில் முழுதாகத் திட்டமிடப்பட்ட நிலையில், அருங்காட்சியகம் மட்டுமே கட்டப்பட்டது. அதற்கான அடிக்கல் 9 ஏப்ரல் 1954 அன்று நாட்டப்பட்டது.[3] நவீனத்துவ கட்டிடக்கலைஇது அவரது கையொப்ப பைலட்டிஸில் உள்ளது. அவை 3.4 மீட்டர்கள் (அதாவது 11 அடி உயரம்) கொண்டதாகும்.கட்டிடத்தின் வெளிப்புறமானது வெற்று செங்கல் கட்டுமானத்தைக் கொண்டு அமைந்துள்ளது. மூல கான்கிரீட் ( பெட்டன் புருட் ) கட்டமைப்பின் கூறுகள் தெரியும் வண்ணம் அமைந்துள்ளது. கட்டடங்களின் வடிவமைமைப்பு 7 மீட்டர்கள் (அதாவது 23 அடி உயரம்) கொண்டதாகும். இந்த கட்டிடம் வெப்பமான காலநிலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூரையில் பல பெரிய பேசின்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடிப்பகுதியிலிருந்து உள்ளே நுழையும்போது அங்கு ஒரு பெரிய அரங்கத்தைக் காண முடியும். அங்கிருந்து காட்சிக்கூடங்களுக்குச் செல்ல வசதி உள்ளது. கட்டடத்தின் உட்புறத்தில் உள்ள பகுதிகள் பிளாஸ்டரைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.[3][4] லே கார்பூசியரின் பிற திட்டங்களான, வரம்பற்ற அருங்காட்சியக நீட்டிப்பு திட்டம், டோக்கியோ நகரில் உள்ள மேற்கத்திய தேசிய கலை அருங்காட்சியகம் மற்றும் சண்டிகர் நகரிலுள்ள அரசு அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடம் போன்றவற்றை ஒத்த கலைப்பாணி அடிப்படையில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. திட்டம் என்பதானது சுழல் வடிவில், பின்னர் விரிவாக்கம் செய்து கொள்வதற்கு வசதியாக உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.[3][4] சேகரிப்புகள்இந்த அருங்காட்சியகத்தில் நகரத்தின் வரலாறு, கலை, புகைப்படக்கலை, மகாத்மா காந்தி, இந்திய சுதந்திரப் போராட்டம், அகமதாபாத்தின் பல்வேறு மத சமூகங்கள் தொடர்பான பல்வேறு பிரிவுகள் தொடர்பான காட்சிக்கூடங்கள் காணப்படுகின்றன.[1] இங்கு உலகின் மிக உயரமான, 4.5 மீ. உயரமுள்ள தூபக் குச்சி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[2] இந்த கட்டிடத்தில் காத்தாடி (பறக்கும் பட்டம்) அருங்காட்சியகம் உள்ளது, இப் பிரிவில் பலவிதமான காத்தாடிகளும், புகைப்படங்களும், பிற கலைப்பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எல்லிஸ் பாலத்தின் அடித்தள ப்ளாக் சன்ஸ்கர் கேந்திராவுக்கு பின்னர் மாற்றப்பட்டது. இது பின்வருமாறு:
புகைப்படத் தொகுப்பு
மேலும் காண்ககுறிப்புகள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia