சமணத் தமிழ் இலக்கியம்சமணத் தமிழ் இலக்கியம் என்பது சமண மதச் சார்புடைய தமிழ் மொழியிலான இலக்கியங்களைக் குறிக்கும். சமண மதம் பல்வேறு மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்குப் பெருமளவில் பங்களித்துள்ளது. குறிப்பாக சமண இலக்கியங்கள் வட இந்தியப் பண்டைய மொழிகளான அர்த்தமாகதி மற்றும் மகாராட்டிரப் பிராகிருத மொழியில் பெருமளவில் இயற்றப்பட்டுள்ளன. சமண மதம் தென்னிந்தியாவினூடாகத் தமிழகத்துக்குப் பரவிய பின்னர், சமண மதத்தைச் சேர்ந்த துறவிகளும் புலவர்களும் பல்வேறு இலக்கிய மற்றும் இலக்கண நூல்களை இயற்றியும் வகுத்தும் தமிழ் மொழிக்குத் தொண்டாற்றியுள்ளனர். தமிழை வளர்த்ததாகக் குறிப்பிடப்படும் மூன்று தமிழ்ச் சங்கங்களின் மரபுக்கதை சமணர்களால் நடாத்தப்பட்ட சைனசங்கத்தை அடியொற்றி உருவாக்கப்பட்டதாக சோர்ச் எல். ஆர்ட் என்பவர் குறிப்பிடுகிறார். பொ.ஊ. 470ல் வச்சிரநந்தி என்பவரால் திராவிட சங்கம் எனும் பெயரில் ஒரு தமிழ் மொழி ஆராய்ச்சிக் கழகம் நடாத்தப்பட்டு வந்துள்ளது. [1][2] ![]() ஐம்பெருங் காப்பியங்கள்1. சிலப்பதிகாரம்: சிலப்பதிகாரம் சமண சமயத்தை சார்ந்த நூல். இதை இயற்றியவர் இளங்கோவடிகள் ஆவார். சிலப்பதிகாரம் 3 காண்டங்களையும் 30 காதைக்காகளியும் கொண்ட நூல் ஆகும். இஃது கண்ணகியின் காற் சிலம்பை பற்றிய வரலாற்றை கூறும் நூல் ஆகும். 2. மணிமேகலை: மணிமேகலை நூலை எழுதியவர் சீத்தலை சாத்தனார் ஆவார். இஃது புத்த (அ) பௌத்த மதத்தை சார்ந்த நூல் ஆகும். இதில் 30 காதைகள் உள்ளன. 3. சீவக சிந்தாமணி: சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்க தேவர் ஆவார். இது 3 இலம்பகங்களை கொண்ட நூல் ஆகும். இஃது சமண சமயத்தை சார்ந்த நூல். 4. வளையாபதி: இதனை எழுதியவர் யாரென்பது இன்னும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இந்நூல் சமண சமயத்தை சார்ந்த நூல் ஆகும். 5. குண்டலகேசி: குண்டலகேசியை இயற்றியவர் நாதகுத்தனார் ஆவார். இது 19 பாடல்களை கொண்ட நூல் ஆகும். இஃது புத்த மதத்தை சார்ந்த நூல். ஐஞ்சிறு காப்பியங்கள்1. உதயண குமார காவியம்: தமிழில் ஐஞ்சிறு காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது உதய குமாரன காவியம் ஆகும். இதனை எழுதியவர் யாரென்பது இன்னும் அறியப்படவில்லை. இது 6 காண்டங்களை கொண்ட நூல். 2. நாக குமார காவியம்: இதனை எழுதியவர் யாரென்பது இன்னும் அறியப்படவில்லை. இது 5 சருக்கங்களை கொண்ட நூல். 3. யசோதர காவியம்: இந்நூலை எழுதியவர் வெண்ணாவலுடையார் ஆவார். இது 5 சருக்கங்களை கொண்ட நூல் ஆகும். 4. நீலகேசி: இந்நூலை எழுதியவர் யாரென்பது இன்னும் அறியப்படவில்லை. இது 10 சருக்கங்களை கொண்ட நூல். 5. சூளாமணி: இந்நூலை எழுதியவர் தோலாமொழிதேவர் ஆவார். இது 12 சருக்கங்களை கொண்ட நூல் ஆகும். ஐஞ்சிறு காப்பியங்கள் என்னென்ன என்று சொல்லுங்கள்புதிய பாவினங்களின் அறிமுகம்களப்பிரர்களின் ஆட்சிக்காலத்தில் சமண மதத்தவர் பல்வேறு புதிய பாவினங்களைத் தமிழில் அறிமுகப்படுத்தினர். விருத்தப்பாக்களாலான பல்வேறு இலக்கியங்கள் சமணர்களால் எழுதப்பட்டுள்ளன.[3] இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia