சமயத் துன்புறுத்தல்சமயத் துன்புறுத்தல் என்பது ஒரு குழுவால் தனி நபர் அல்லது குழு மீது அவர்களின் நம்பிக்கை அல்லது சமய நம்பிக்கை இன்மைக்காக மேற்கொள்ளப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட மோசமாக நடந்து கொள்ளும் ஓர் செயற்பாடாகும். சமயத் துன்புறுத்தல் மதவெறியால் அல்லது அரசினால் தன் பாதுகாப்பு அல்லது விருப்பத்திற்கு எதிராக குறித்த சமயக் குழுவைக் கருதும்போது ஏற்படலாம். பல நாடுகளில் சமயத் துன்புறுத்தல் பெரும் வன்முறையினைத் தோற்றுவித்து மனித உரிமை பிரச்சனையாக கருதப்பட்டுள்ளது. வடிவங்கள்சமயத் துன்புறுத்தல் சமயச் சுதந்திரத்திற்கு எதிரிடையானதாகக் கருதப்படலாம். சமயத் துன்புறுத்தல் இறைமறுப்பாளர்களைக் கூட, அவர்கள் கடவுளைக் கொண்டிராதவர்கள் என்பதற்காக சமய நம்பிக்கையாளர்களால் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது பொதுவாக ஒரு குழுவினுள் தங்கள் சமய நம்பிக்கையை நிலை நிறுத்த முயற்சித்ததற்காக குற்றஞ் சாட்டப்பட்டு துன்புறுத்தப்படலாம். அல்லது தனி அல்லது நிறுவன வல்லமை ஓர் குறித்த சமயக் குழு அங்கத்தவர்களை துன்பத்திற்குள்ளாக்கலாம். துன்புறுத்தல் சொத்துக்களை அழித்தல், வெறுப்பிற்குத் தூண்டி விடுதல், கைது, சிறை வைத்தல், அடித்தல், சித்திரவதை, மரண தண்ணடனை ஆகிய வடிவங்களில் நிகழலாம். சமயத்தின் அடிப்படை மீதான சிவில் உரிமை மறுப்பு சமயத் துன்புறுத்தல் என்பதைவிட சமயப் பாரபட்சம் என விபரிக்கப்படுகின்றது. இவற்றையும் பார்க்கஉசாத்துணைமேலதிக வாசிப்பு
வெளியிணைப்பு
|
Portal di Ensiklopedia Dunia