சமர கப்புகெதர

சமர கந்த கபுகெதர (பிறப்பு:24 பெப்ரவரி 1987 கண்டி) அல்லது சுருக்கமாக சாமர கபுகெதர (கபு) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வலதுகை துடுப்பாட்ட வீரராவார். 2006 ஆம் ஆண்டு பார்த்தில் நடந்த ஆத்திரேலியா அணிக்கெதிரான போட்டியில் விளையாடியதனூடாக சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட உலகில் அறிமுகமானார். இவர் இலங்கை தேசிய துடுப்பாட்ட அணி, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, கொழும்பு துடுப்பாட்ட அணி, கந்துரட்ட துடுப்பாட்ட அணி, இலங்கை ஏ அணி ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ளார்.

2011 துடுப்பாட்ட உலகக்கிண்ண இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள இவரின் ஒருநாள் துடுப்பாட்ட விபரங்கள் வருமாறு. (இத்தரவுகள் 12 பெப்ரவரி 2011.இல் உள்ளபடி)

துடுப்பாட்டம்

இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 85

  • விளையாடிய இனிங்ஸ்: 70
  • ஆட்டமிழக்காமை: ஏழு
  • ஓட்டங்கள்: 1440
  • கூடிய ஓட்டம் 95,
  • சராசரி: 22.85
  • 100 கள்: 0,
  • 50கள்: 7

இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 156

  • விளையாடிய இனிங்ஸ்: 134
  • ஆட்டமிழக்காமை: 13
  • ஓட்டங்கள்: 3177
  • கூடிய ஓட்டம்: 108
  • சராசரி: 26.25
  • 100கள்: 2
  • 50கள்: 17.

பந்து வீச்சு

இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 85

  • வீசிய பந்துகள் :258
  • கொடுத்த ஓட்டங்கள்:218
  • கைப்பற்றிய விக்கட்டுக்கள் :2
  • சிறந்த பந்து வீச்சு: 1/24
  • சராசரி: 109.00
  • ஐந்து விக்கட்டுக்கள்: 0

இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 156

  • வீசிய பந்துகள்: 469
  • கொடுத்த ஓட்டங்கள்: 411
  • கைப்பற்றிய விக்கட்டுக்கள்: 7
  • சிறந்த பந்து வீச்சு: 1/19
  • சராசரி: 58.71 ,
  • ஐந்து விக்கட்டுக்கள்: 0

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya