சமிக்கா கருணாரத்தின
சமிக்கா கருணாரத்தின (Chamika Karunaratne, பிறப்பு: மே 29, 1996) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காக சர்வதேச தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் மற்றும் இருபது20 ஆகிய உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். மேலும் இவர் 2015 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2015 ஆம் ஆண்டில் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமான இவர் 2019 ஆம் ஆண்டில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். இவர் தற்போது வரை 31 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 1041 ஓட்டங்களையும் , 37 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 273 ஓட்டங்களையும் , 1 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 22 ஓட்டங்களையும் 10 இருபது20 போட்டிகளில் விளையாடி 60 ஓட்டங்களையும் எடுத்துள்ளார். உள்ளூர் போட்டிகள்முதல் தரத் துடுப்பாட்டம்இவர் 2015 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். டிசம்பர் 18 இல் கொழும்பு துடுப்பாட்ட அரங்கத்தில் தமிழ்நாடு யூனியன் துடுப்பாட்ட சங்க அணிக்கு எதிரான போட்டியில் இவர் மூர்ச் துடுப்பாட்ட அணி சார்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். [1]பின் 2019 ஆம் ஆண்டில் மே 25 இல் பேல்கம் துடுப்பாட்ட அரங்கத்தில் இந்திய அ துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் இலங்கை அ துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். 2019 சூப்பர் மாகாண ஒரு நாள் போட்டியில் இவர் கொழும்பு அணியில் இடம் பெற்றார்.[2] பட்டியல் அ2015 ஆம் ஆண்டில் இவர் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். நவம்பர் 28 இல் கொழும்பு துடுப்பாட்ட அரங்கத்தில் தமிழ்நாடு யூனியன் துடுப்பாட்ட சங்க துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் சராசென்ஸ் துடுப்பாட்ட சங்க அணி சார்பாக பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.பின் 2019 ஆம் ஆண்டில் நவம்பர் 18,இல் காக்ஸ் பசாரில் உள்ள துடுப்பாட்ட அரங்கத்தில் ஆப்கானித்தான் லெவன் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ போட்டியில் இவர் இலங்கை லெவன் அணி சார்பாக விளையாடினார். இருபது202015 ஆம் ஆண்டில் இவர் இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். டிசம்பர் 22 இல் கொழும்பு துடுப்பாட்ட அரங்கத்தில் தமிழ்நாடு யூனியன் துடுப்பாட்ட சங்க அணிக்கு எதிரான போட்டியில் இவர் கொழும்பு துடுப்பாட்ட சங்க அணி சார்பாக இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.பின் 2018 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 25 இல் தம்புலா துடுப்பாட்ட அரங்கத்தில் காலி துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் இவர் கண்டி துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். சர்வதேச போட்டிகள்2019 ஆம் ஆண்டில் இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். [3]பெப்ரவரி 1 இல் கான்பெராவில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இலங்கைத் துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் இவர் விளையாடினார்.[4][5] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia