சமையல் அடுப்பு

சமையல் அடுப்பு (Kitchen stove) என்பது சமையலறையில் உணவு பொருள் சமையல் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் அடுப்புகள் ஆகும். இந்த அடுப்புகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான எரிபொருள்களுக்கேற்ப அடுப்புகளும் மாறுபடுகின்றன.

திட எரிபொருள் அடுப்புகள்

மரக்குச்சிகள் (விறகு), மரத்தூள், தேங்காய் மட்டை, கடலைப்பருப்பு மற்றும் முந்திரிப்பருப்பு ஓடுகள், நிலக்கரி போன்ற திடப்பொருள்களை மூல எரிபொருள்களாகக் கொண்டு அமைக்கப்படும் அடுப்புகள் இவ்வகையைச் சேர்ந்தவையாகும்.

திரவ எரிபொருள் அடுப்புகள்

மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் போன்ற திரவப் பொருள்களை மூல எரிபொருள்களாகக் கொண்டு அமைக்கப்படும் அடுப்புகள் இவ்வகையைச் சேர்ந்தவையாகும்.

எரி வாயு அடுப்புகள்

திரவநிலை பெட்ரோலிய எரிவாயு (LPG), சாண எரிவாயு போன்றவைகளை மூல எரிபொருள்களாகக் கொண்டு அமைக்கப்படும் அடுப்புகள் இவ்வகையைச் சேர்ந்தவையாகும்.

மின்சார அடுப்புகள்

மின்சாரத்தைப் பயன்பாட்டுப் பொருளாகக் கொண்டு அமைக்கப்படும் அடுப்புகள் இவ்வகையைச் சேர்ந்தவையாகும்.

சூரிய ஒளி அடுப்புகள்

சூரிய ஒளியைச் சேமித்து வைத்துக் கொண்டு அதன் மூலம் எரிசக்தியைப் பெறக்கூடிய அடுப்புகள் இவ்வகையைச் சேர்ந்தவையாகும்.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Stoves in India
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya