சம்பு சரண் மல்லிக்

ராமகிருஷ்ண பரமஹம்சரின் இல்லறச் சீடர் சம்பு சரண் மல்லிக். அன்னை சாரதா தேவி தட்சிணேசுவரத்தின் நகபத்தின் நெருக்கடியான சிறிய அறையில் தங்கியிருந்ததால் சிரமப்படுவதைக் கண்டு ஓர் சிறிய வீடு கட்டித் தந்தவர். அன்னைக்கான இந்த வீட்டின் கட்டுமானப் பொருட்களை நேபாள அரசாங்கத்தில் பணியாற்றிய கேப்டன் விஸ்வநாத் உபாத்தியாயர் தந்து உதவினார். இவர் ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் அன்னை சாரதா தேவிக்கும் சுமார் நான்கு வருடங்கள் சேவை செய்தார்.

தேவி தமது தேவைகளை நிறைவேற்றவல்லவர்களாகக் காட்டியதாக ராமகிருஷ்ண பரமஹம்சர் குறிப்பிட்ட ஐவரில் இரண்டாமர் இவர். சம்பு சரண் மல்லிக் பிரம்ம சமாஜத்தின் தலைவரான கேசவ சந்திர சென்னின் நெருங்கிய நண்பர். இவர் மதங்களைப் பொறுத்தவரை பரந்த நோக்கம் உடையவர், ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு விவிலியம் வாசித்துக் காட்டியவர்.[1]

மேற்கோள்கள்

  1. கடவுளுடன் வாழ்ந்தவர்கள்; பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லறச் சீடர்கள் 2; பக்கம் 141-152
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya