சயீத் அஜ்மல்
சயீத் அஜ்மல் (Saeed Ajmal, Urdu: سعید اجمل, பிறப்பு: 14 அக்டோபர் 1977), ஒரு பாக்கிஸ்தான் துடுப்பாட்டக்காரர். பைசலாபாத்தில் பிறந்த இவர் பந்துவீச்சாளர். பாக்கிஸ்தான் தேசிய அணி பைசலாபாத் துடுப்பாட்ட அணி, இஸ்லாமாபாத் அணி, கான் ஆய்வு கூட அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார். வலதுகை புறத்திருப்ப பந்து வீச்சாளர் மற்றும் வலதுகை மட்டையாளர் ஆவார். 2008 ஆம் ஆண்டில் தனது 30 ஆவது வயதில் தனது முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். பின் 2009 ஆம் ஆண்டில் இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இவரின் பந்துவீசும் முறை சர்ச்சைக்கு உள்ளானது. பின் அதனை சரிசெய்து 2009 ஐசிசி உலக இருபது20 கோப்பையை பாக்கித்தான் அணி வெல்வதற்கு உதவினார். டிசம்பர் 2014 இல் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் பந்து வீச்சாளருக்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தரவரிசையில் இவர் முதலிடம் பிடித்தார். இவர் 2011 முதல் 2014 டிசம்பர் வரை முதலிடத்தில் நீடித்தார். பின் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சுனில் நரைன் முதலிடம் பிடித்ததால் இவர் இரண்டாம் இடம் பெற்றார். இவர் ஒரே சமயத்தில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்டப் பந்து வீச்சாளருக்கான தரவரிசையில் 9 ஆவது இடத்தையும், பன்னாட்டு இருபது20 போட்டித் தரவரிசையில் 2 ஆவது இடத்தையும் பிடித்தார்.[1] 30 வயதிற்கு மேல் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி 100 இலக்குகளைக் கைப்பற்றிய நான்காவது சர்வதேச வீரர் எனும் பெருமை பெற்றார். இதற்கு முன்னதாக கிளாரி கிரிம்மட்,திலிப்தோஷி, மற்றும் ரியான் ஹாரிசாகியோர் இந்தச் சாதனைகளைப் புரிந்தனர்.[2] இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சனவரி 28,2012 இல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் தனது 100 ஆவது இலக்கினைக் கைப்பற்றினார். இதன்மூலம் விரைவாக 100 ஆவது இலக்கினைக் கைப்பற்றிய பாக்கித்தானிய வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[3] மேலும் பன்னாட்டு இருபது20 போடிகளில் அதிக இலக்கினைக் கைப்பற்றிய பாக்கித்தானிய வீரர் எனும் சாதனையைப் படைத்தார். பின் சாகித் அஃபிரிடி 101 இலக்குகள் எடுத்து இந்தச் சாதனையைத் தகர்த்தார்.[4] 2012 ஆம் ஆண்டில் பிக்பாஷ் லீக்கில் அடிலெய்டு ஸ்டிரக்கர்ஸ் அணிக்காக விளையாடினார்.[5] சர்வதேச போட்டிகள்2009 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . காலி பன்னாட்டு அரங்கத்தில் சூலை 4 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[6] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 24 ஓவர்கள் வீசி 79 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.இதில் 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.இதில்4 ஓவர்களை மெய்டனாக வீசினார். இவரின் சராசரி 3.38 ஆகும்.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 13 ஓவர்கள் வீசி 34 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். 3 இலக்கினைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இலங்கை அணி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சான்றுகள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia