சரவாக் மக்கள் உணர்வுக் கட்சி
சரவாக் மக்கள் உணர்வுக் கட்சி (ஆங்கிலம்: Sarawak People's Conscious Party; மலாய்: Parti Sedar Rakyat Sarawak) (SEDAR) என்பது மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். 2019-இல் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட இந்தக் கட்சியின் தலைமையகம் சரவாக் கூச்சிங் மாநகரத்தில் உள்ளது. இந்தக் கட்சி சரவாக் மாநிலத்தின் அடிப்படைக் கட்டமைப்பு; மேம்பாட்டு விவகாரங்கள்; மாநிலக் கல்வி முறை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது. இந்த உள்ளூர் அரசியல் கட்சி சூன் 2018-இல் டத்தோ ஒசுமான் அப்துல்லா என்பவரால் நிறுவப்பட்டது.[1] பொதுஇந்த அரசியல் கட்சி 28 மே 2019 அன்று, மலேசிய சங்கங்களின் பதிவாளர் (Malaysian Registrar of Societies) மூலம் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது. செப்டம்பர் 13, 2023 அன்று, இந்தக் கட்சி தேசிய அரசியல் கட்சியாக அறிவித்தது.[2]. கொள்கை
தேர்தல் முடிவுகள்இந்த அரசியல் கட்சி முதல் முறையாக 2021-ஆம் ஆண்டு சரவாக் மாநில தேர்தலில் பங்கேற்றது. தேர்தலில் போட்டியிட்ட 5 வேட்பாளர்களும் தோல்வியுற்றனர்; தங்களின் வைப்புத் தொகையையும் இழந்தனர்.[3] மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia