சரான்சுக்
சரான்சுக் (Saransk, உருசியம்: Саранск, பஒஅ: [சரான்ஸ்க்]) என்பது உருசியாவின் ஒரு நகரமும், மொர்தோவியக் குடியரசின் தலைநகரமும், அதன் பொருளாதார மையமும் ஆகும். இது வோல்கா வடிநிலப் பகுதியில் சராங்கா, இன்சார் ஆறுகள் சந்திக்கும் பகுதியில், மாஸ்கோவில் இருந்து கிட்டத்தட்ட 630 கி.மீ. கிழக்கே அமைந்துள்ளது. 2010 கணக்கெடுப்பின் படி இந்நகரத்தின் மக்கள்தொகை 297,415 ஆகும். ஆத்திமார் என்ற இங்குள்ள உருசியக் கோட்டை 1641 ஆம் ஆண்டில் உருசியாவின் சாராட்சிக் காலத்தில் தென்கிழக்கு போர்முனையில் முக்கிய கோட்டையாகத் திகழ்ந்தது. இன்றைய பெயர் சரான்சுக் இங்குள்ள சராங்கா ஆற்றின் பெயரில் இருந்து பெறப்பட்டது. இந்நகரம் இதன் அண்மையில் உள்ள எர்சியா கிராமத்தவர்களுக்கு ஒரு முக்கிய வணிக மையமாகத் திகழ்ந்தது. 1780 இல் இக்குடியேற்றம் நகர அந்தஸ்தைப் பெற்றது. 1928 இல் சரான்சுக் மொர்தோவிய தேசிய வட்டாரத்தின் (1930 இல் மொர்தோவிய சுயாட்சி வட்டாரம்) தலைநகரமாக இருந்தது. 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளின் நான்கு குழுநிலை ஆட்டங்கள் இங்குள்ள மொர்தோவியா அரங்கில் நடத்தப்படவிருக்கின்றன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia