சரூப் சிங்
முனைவர் சரூப் சிங் (Dr. Sarup Singh)(சுவரூப் சிங்) (9 ஜனவரி 1917 - 4 ஆகஸ்ட் 2003 [1]) இந்திய கல்வியாளராக இருந்த இவர், அரசியல்வாதியாக மாறினார். இவர் தில்லியின் கிரோரி மால் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார் (1971-74).[2] லோக் தள் கட்சி சார்பாக அரியானாவிலிருந்து (1978-1984) மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[3] பின்னர் இவர் திசம்பர் 1990இல் குஜராத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1995 வரை அந்தப் பதவியில் இருந்தார். முன்னதாக இவர் கேரள ஆளுநராகவும் இருந்தார்.[4][5] ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும்அரியானாவில் உள்ள ரோத்தக் மாவட்டத்திலுள்ள சங்கி கிராமத்தில் பிறந்த இவர், தனது சொந்த கிராமத்தில் நான்காம் வகுப்பு வரை படித்து, 1934இல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மெட்ரிகுலேஷனை முடித்தார். 1936இல் தில்லி பல்கலைக்கழகத்தில் இடைநிலைக் கலையையும் முடித்தார். இவர் தில்லி ராம்ஜாஸ் கல்லூரியில் (1938) ஆங்கிலத்தில் தனது இளங்கலையை முடித்தார். அதைத் தொடர்ந்து 1940இல் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றார். [6] [7] தொழில்சிங், 1940இல் தில்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியில் விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு இவர் பத்தாண்டுக்கும் மேலாக கற்பித்தார். 1951இல் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்தார். 1953இல் ஆங்கில இலக்கியத்தில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். அதன் பிறகு இவர் மீண்டும் இந்து கல்லூரியில் சேர்ந்தார். எனினும் அடுத்த ஆண்டு, இவர் தில்லியின் கிரோரி மால் கல்லூரியின் துணை முதல்வராகவும் பின்னர் 1957 இல் அதன் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 1961ஆம் ஆண்டில், குருசேத்திரா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறை நிறுவப்பட்டபோது, இவர் அதன் முதல் தலைவரானார்.[8] பின்னர் 1965இல், தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகவும் தலைவராகவும் ஆனார். இறுதியில், இவர் ஜனவரி, 1971இல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.[6] இவர் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராகவும் இருந்தார் (1975-1978). அரியானாவிலிருந்து மாநிலங்களவை உறுப்பினரானார் (1978 - 1984). இவர் 12 பிப்ரவரி 1990 முதல் 20 நவம்பர் 1990 வரை கேரள ஆளுநராகவும்[9] இருந்தார். கௌரவங்கள்இவரது மறைவிற்குப் பிறகு, அரியானா குருசேத்திரா பல்கலைக்கழகத்தில் 'முனைவர் சரூப் சிங் இருக்கை' உருவாக்கப்பட்டது .[7] கல்லூரியின் ஆங்கிலத் துறையும் "முனைவ்ர் சருப் சிங் சொற்பொழிவுகளை" இவரது பிறந்தநாளில் ஏற்பாடு செய்தது. அதே நேரத்தில் சேக்சுபியரின் கருத்தரங்குகளை தலைவர் சேக்சுபியரின் இந்தியச் சஙகத்துடன் இணைந்து 2006 இல் தொடங்கியது.[8][10] முதல் "முனைவர் சருப் சிங் நினைவு சொற்பொழிவு" 2005 இல் தில்லி பல்கலைக்கழகத்தில்[11] நடந்தது. பணிகள்
இதையும் பார்க்கவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia