சரோஜா ராமாமிருதம்
சரோஜா ராமாமிருதம் (28 சனவரி 1931 – 14 அக்டோபர் 2019[1]) என்பவர் பேபி சரோஜா என்னும் பெயரில் 1930களில் தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை வேடங்களில் நடித்தவர். இவர் பாலயோகினி (1937), தியாகபூமி (1939), காமதேனு (1941) ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2] வாழ்க்கைச் சுருக்கம்பிரபல திரைப்பட இயக்குநர் கே. சுப்பிரமணியத்தின் சகோதரர் கே. விசுவநாதன், மற்றும் வத்சலா ஆகியோருக்குப் பிறந்தவர் சரோஜா. தந்தை விசுவநாதன் சென்னையில் சித்திரா டாக்கீசு என்ற பெயரில் திரையரங்கு ஒன்றை நடத்தி வந்தார். பேபி சரோஜா நடித்த மூன்று திரைப்படங்களையும் கே. சுப்பிரமணியமே தயாரித்திருந்தார். காமதேனு திரைப்படத்தில் சரோஜாவின் தந்தையும் (கே. பி. வத்சல்), தாயும் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர்.[3] அக்காலகட்டத்தில் கலிபோர்னியா மாநிலம் சாந்தா மொனிக்காவைச் சேர்ந்த ஷெர்லி டெம்பிள் என்ற குழந்தை நட்சத்திரம், பிரமாதமான நடிப்பால் உலகப் புகழ் பெற்றிருந்தார். அதே சமயம் இந்தியாவில் சரோஜா அவர்கள் தன் நடிப்புத் திரமையைக் கொண்டு எல்லோராலும் பாராட்டப் பட்டு இந்தியாவின் ஷிர்லி டெம்பிள் என்று மக்களால் போற்றப்பட்டார். மேலும் அப்போது தமிழ்நாட்டில் பிறந்த சில பெண் குழந்தைகளுக்குப் ”சரோஜ” என்று பெயர் சூட்டினார்கள்.[4] மேலும் பேபி சரோஜா சோப், சரோஜா பவுடர் என வணிகப் பொருட்களிலும் இடம்பெற்றார். அதேபோல கைப்பைகள், நோட்டுப் புத்தகங்கள் போன்றவற்றிலும் சரோஜாவின் ஒளிப்படம் இடம்பெற்றது.[5] இறப்புபேபி சரோஜா மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் 2019 அக்டோபர் 14 ஆம் நாள் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 88.[1][6] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia